ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வெற்றியை அசிங்கப்படுத்தும் சக்தி - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

வெற்றியை அசிங்கப்படுத்தும் சக்தி - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

வெற்றியை அசிங்கப்படுத்தும் சக்தி, நடந்தது என்ன? மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இன்றைய எபிசோடில் நான் காதலிக்கிறேன் என்று தவறாக புரிந்து கொண்டாய் என சக்தி கோபமாக சொல்லி வெற்றியை திட்டி சக்தி அவமானப்படுத்தி அனுப்புகிறாள்.

    அடுத்து யமுனா சக்தியிடம் வெற்றி மட்டும் தவறு செய்யவில்லை நாமும் தான் என சொல்கிறாள். மேலும் நீ வீட்டுக்கு வரணும் அம்மா நிலைமை மோசமாக இருக்கிறது என யமுனா செல்ல இதெல்லாம் பார்த்த பூஜா சந்தோஷமாகிறாள்.

    துர்கா வாசலில் வீட்டுக்கு வரும் சக்தியை பார்த்து உள்ளே அழைத்துப் செல்ல மீனாட்சி சக்தியை பார்த்தவுடன் சமாதானப்படுத்தி அழைத்து சென்று சக்தியிடம் செல்வா ஏன் இந்த மாதிரி செய்தான் என்று கேட்க சக்தி மீனாட்சியிடம் நடந்ததெல்லாம் சொல்கிறாள்.

    Also read... ஒரு மனம் நிற்க சொல்லுதே.. ஒரு மனம் எட்டி தள்ளுதே.. ரிது வர்மா லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

    மேலும் சக்தி நான் காதலிக்கவில்லை அவன் தான் தவறாக நினைத்து விட்டான் என்று மீனாட்சியிடம் சொல்ல மீனாட்சி தோசை ஊட்டி விடுகிறாள், வெற்றி திடியனிடம் நான் தவறாக புரிந்து கொண்டேன் தவறு செய்து விட்டேன் என்று புலம்பி, தாஜ்மஹாலை பார்த்து சக்தி சொன்னதெல்லாம் நினைத்து பார்க்கிறான். அடுத்து நடக்கப் போவது என்ன? ஷக்தி வெற்றியை ஏற்பாளா? யமுனா வாழ்க்கை என்னவாகும் என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv