ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வீட்டுக்கு வந்த வெற்றியை திட்டி வெளியே அனுப்பிய மீனாட்சி - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

வீட்டுக்கு வந்த வெற்றியை திட்டி வெளியே அனுப்பிய மீனாட்சி - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

வீட்டுக்கு வந்த வெற்றியை திட்டி வெளியே அனுப்பிய மீனாட்சி, மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்  சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இன்றைய எபிசோடில் மீனாட்சியிடம் கோபித்துக் கொண்டு கோவிலுக்கு வரும் சக்தி இரவு முழுவதும் கோவிலிலேயே தங்கி விடுகிறாள்.

    இந்த பக்கம் சக்தி யமுனாவுக்காக கோயிலில் வேண்டிக்கொண்டு அங்கப்பிரதட்சணம் செய்து கையில் சூடம் ஏற்றி வேண்டுகிறாள். சக்தி இன்னும் வீட்டுக்கு வரவில்லை என்று யமுனாவும் துர்காவும் கவலைப்படுகின்றனர். அதற்கு மீனாட்சி சக்தி வருவாள் என சொல்கிறாள்.

    இந்த நேரத்தில் வீட்டுக்குள் வரும் வெற்றியை திட்டி மீனாட்சி கதவை சாத்த அங்கே வெற்றியை பார்த்த திடியன் ஓடி வந்து சக்தி கோயிலில் தான் இருக்கிறாள் என வெற்றியை கோவிலுக்கு அழைத்துச் செல்கிறான்.

    பின்னர் வெற்றி கோயிலுக்குள்ளே சென்று சக்தியை பார்த்து பேச முயற்சி செய்யும்போது சக்தி கோபமாக வெற்றியிடம் உன்னை நம்புனது என்னுடைய தப்பு, நான் உன்னை காதலிக்கவில்லை நீ என் கேரக்டர பத்தி தப்பா பேசி விட்டாய் என்று அவனை அனைவர் முன்னிலையிலும் திட்டி அவமானப்படுத்துகிறாள்.

    Also read... இணையத்தில் வைரலாகும் காஜல் அகர்வாலின் கோஸ்டி பட ஸ்டில்ஸ்!

    இதனால் அடுத்து நடக்கப் போவது என்ன? வெற்றி சக்தியை எப்படி சமாதானப்படுத்த போகிறான் இவர்களது வாழ்க்கையில் என்ன நடக்கும் என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv