ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மீனாட்சியை கொடுமைப்படுத்தும் போலீஸ் - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

மீனாட்சியை கொடுமைப்படுத்தும் போலீஸ் - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

மீனாட்சி பொண்ணுங்க

மீனாட்சி பொண்ணுங்க

மீனாட்சியை கொடுமைப்படுத்தும் போலீஸ், தர்ணா செய்யும் சக்தி.. வெற்றிக்குத் தெரிய வந்த உண்மை என மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இன்றைய எபிசோடில் சங்கிலியை கொன்ற காரணத்துக்காக போலீஸ் மீனாட்சியை கைது செய்தது பற்றி வெற்றிக்கு தெரிய வருகிறது.

    இதனையடுத்து திடியனிடம் வெற்றி இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று சொல்லி திட்டமிடுகின்றனர். இந்த பக்கம் புஷ்பாவிடம் பணம் வாங்கிய இன்ஸ்பெக்டர் மீனாட்சியை தண்ணீரில் மூழ்க வைத்து கொடுமை படுத்தி விசாரணை செய்கிறது.

    மீனாட்சியை விசாரணை செய்யும் போலீசை பார்த்த டீ குடுக்கும் பையன் வெளியே வந்து சக்தியிடம் இதைப் பற்றி சொல்ல, யமுனா சாந்தா மற்றும் துர்கா மீனாட்சியை கொடுமை செய்வது பற்றி தெரிய வர போலீஸ் ஸ்டேஷன் வாசலில் சக்தியுடன் கொட்டும் மழையில் உட்காருகின்றனர்.

    Also read... அழகிய சிண்ட்ரெல்லா உடையில் நடிகை ஜான்வி கபூரின் கலக்கல் போட்டோஸ்!

    சங்கிலியை போஸ்ட்மார்ட்டம் செய்ய வந்த டாக்டர் போனில் பேசும்போது திடியன் அதைக் கேட்டு ஷாக் ஆகி வெற்றியிடம் சங்கிலி இன்னும் சாகவில்லை இதெல்லாம் ஒரு செட்டப் என்று வெற்றிக்கு சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன? மீனாட்சி காப்பாற்ற வெற்றி என்ன செய்யப் போகிறான் என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv