ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

புஷ்பாவின் சதியால் மீனாட்சி மீது விழுந்த கொலை பழி - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

புஷ்பாவின் சதியால் மீனாட்சி மீது விழுந்த கொலை பழி - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

மீனாட்சி பொண்ணுங்க

மீனாட்சி பொண்ணுங்க

புஷ்பாவின் சதியால் மீனாட்சி மீது விழுந்த கொலை பழி, அராஜகம் செய்யும் போலீஸ், சக்தியின் முடிவு என்ன என மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இன்றைய எபிசோடில் நீதான் என் தம்பியை கொலை செய்தது என்று புஷ்பா மீனாட்சியை திட்டி விட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்கிறாள்.

  மேலும் புஷ்பா நீதிமணியை பார்த்து மீனாட்சி தான் என் தம்பியை கொலை செய்தது என்று சண்டை போட சங்கிலியை கொன்னது மீனாட்சி தான் என்று இன்ஸ்பெக்டரிடம் பணம் கொடுத்து மீனாட்சியை கைது செய்ய வேண்டும் என புஷ்பா இன்ஸ்பெக்டரிடம் சொல்லுகிறாள்.

  அடுத்து இன்ஸ்பெக்டர் புஷ்பாவிடம் ஒரு கம்ப்ளைன்ட் எழுதி வாங்கிக் கொள்கிறார். இந்த பக்கம் சங்கிலியை யாரோ கொலை செய்து விட்டார்கள் என்று மீனாட்சி சாந்தாவிடம் சொல்லிக் கொண்டிருக்க அப்போது மெஸ்ஸுக்கு போலீஸ் வருகிறது.

  மீனாட்சியை தேடி வந்த போலீஸ் மெஸ்ஸுக்குள்ளே வந்து அராஜகமாய் சோதனை செய்து மீனாட்சி தான் கொலை செய்தாள் என்று போலீஸ் சொல்ல சாந்தாவும் யமுனாவும் போலீசிடம் மீனாட்சி கொலை செய்யவில்லை என்று கெஞ்சுகின்றனர்.

  Also read... இணையத்தில் வைரலாகும் நடிகை மிருணாள் தாகூர் க்ளிக்ஸ்!

  இப்படியான நிலையில் அடுத்து நடக்கப் போவது என்ன? இந்த கொலை கேசில் இருந்து மீனாட்சி எப்படி தப்பிக்க போகிறாள்? சக்தி என்ன செய்யப் போகிறாள் என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: TV Serial, Zee Tamil Tv