ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ரங்கநாயகி போடும் சபதம்... மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

ரங்கநாயகி போடும் சபதம்... மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

மீனாட்சி பொண்ணுங்க

மீனாட்சி பொண்ணுங்க

ரங்கநாயகி போடும் சபதம், வீட்டை விட்டு காணாமல் போன மீனாட்சி, சக்தி செய்யப் போவது என்ன என மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இன்றைய எபிசோடில் போலீஸ் ரங்கநாயகியை கைது செய்து கொண்டு போக, மீனாட்சியை யமுனா தேடி கார்த்திக் வீட்டுக்கு போகிறாள். சக்திக்கு கண்டிஷன் போட்டதனால் அவள் சங்கிலியை திருமணம் செய்ய சம்மதம் சொல்லி விட்டாள். அதை ஒத்துக்காமல் போன மீனாட்சியை காணவில்லை என யமுனா கார்த்திக்கின் தாயிடம் சொல்கிறாள்.

  கல்யாணம் பண்ண இஷ்டம் இருக்கிறதா இல்லையா என்று கார்த்திகேயன் தாய் யமுனாவிடம் கேட்க, அதற்கு யமுனா கார்த்திக்கை திருமணம் செய்ய இஷ்டம் என சொல்லும் போது கார்த்திக்கின் தாய் யமுனாவை கண்டிஷனுக்கு கன்வின்ஸ் செய்து அனுப்புகிறாள். யமுனாவை அனுப்பி விட்டு கார்த்திக்கின் தாயும் தந்தையும் இந்த கல்யாணம் நடக்க போவதில்லை என சந்தோஷப்படுகிறார்கள்,

  அடுத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு உள்ளே ரங்கநாயகி வர சக்தி தான் கம்ப்ளைன்ட் கொடுத்தாள் என்று ரங்கநாயகிக்கு தெரிய வருகிறது. போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும் சக்தி ரங்கநாயகியை பார்த்து திட்டி வெற்றியையும் தூக்கி உள்ளே போடுங்கள் என போலீசிடம் சக்தி சொல்கிறாள், ரங்கநாயகிக்காக பூஜா லாயரோடு போலீஸ் ஸ்டேஷனுக்கு வர ரங்கநாயகி வெளியே வருகிறாள்.

  Also read... இந்த வாரம் எந்த படத்துக்கு போகலாம்னு பிளான் பண்ணிடீங்களா? - தியேட்டரில் ரிலீஸ் ஆகும் படங்கள்!

  எப்படி வெளியே வந்தாள் என சக்தி கேட்டு திட்டி அட்வைஸ் பண்ண, காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைப்பேன் என ரங்கநாயகி சக்தியிடம் சபதம் போடுகிறாள். அடுத்து நடக்கப்போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.2

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: TV Serial, Zee Tamil Tv