ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சங்கிலிக்கு சக்தியை பெண் கேட்டு வரும் புஷ்பா - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்!

சங்கிலிக்கு சக்தியை பெண் கேட்டு வரும் புஷ்பா - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்!

மீனாட்சி பொண்ணுங்க

மீனாட்சி பொண்ணுங்க

சங்கிலிக்கு சக்தியை பெண் கேட்டு வரும் புஷ்பா, மீனாட்சி கொடுத்த அதிர்ச்சி மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

 • News18
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இன்றைய எபிசோடில் மீனாட்சி மாப்பிள்ளை வீட்டாரை துரத்தி அடிக்க, இதை சங்கிலி பார்த்து சந்தோஷப்படுகிறான், சக்தி கோபமாக செல்ல வழியில் வெற்றியின் பைக்கை பார்த்து கோயிலுக்குள் செல்கிறாள்.

  வெற்றியும் அவனுடன் நண்பர்களும் சாமியிடம் வேண்ட வெற்றியையும் நண்பர்களையும் பார்த்து சக்தி வெற்றியை திட்ட நின்னு போன வரனுக்கு நீ தான் காரணம் என சக்தி பழி போட நடந்ததற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று வெற்றி சாமி முன் சத்தியம் செய்கிறான்.

  ஷக்தி நீதான் தவறான தகவலை மாப்பிள்ளையிடம் கொடுத்தது என்று சொல்லி அங்கிருந்து போக சக்தியிடம் தவறாக தகவல்களை யார் கொடுத்தது என்று வெற்றி யோசிக்க வெற்றியின் நண்பர்கள் சங்கிலி தான் இப்படி பண்ணி இருப்பான் என்று அவன் மேல் சந்தேகப்படுகின்றனர்.

  நீதிமணியும் புஷ்பாவும் மீனாட்சி வீட்டிற்கு வர என்ன விஷயம் என்று மீனாட்சி நீதிமணியிடம் கேட்க சங்கிலியை சக்திக்கு மணம் முடிக்க சம்மதம் பேசுவதற்காக நானும் புஷ்பாவும் வந்திருக்கிறோம் என்று மீனாட்சியிடம் நீதிமணி சொல்கிறான்.

  மீனாட்சி அதை கேட்டு பூப்பழ தட்டை தூக்கிஅடித்து சங்கிலிக்கு நான் சக்தியை கொடுக்க முடியாது என சொல்லி, நீதிமணியும் புஷ்பாவையும் திட்டி துரத்த சக்தியை நான் சங்கிலிக்கு எப்படியாவது திருமணம் முடித்து வைப்பேன் என புஷ்பா சபதம் போடுகிறாள்.

  Also read... 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒன்றுகூடிய பொல்லாதவன் படக்குழு - போட்டோஸ்!

  சாந்தாவும் சக்தியும் ரோடில் செல்லும்போது சங்கிலி சக்தியை பார்க்க வர சாந்தா சக்தியிடம் சங்கிலிக்கிட்ட பேச வேண்டாம் என சொல்லுவது, எனக்காக உன்னை பொண்ண பார்த்த விஷயம் கேள்விப்பட்டு வந்தேன் என சங்கிலி சக்தியிடம் சொல்கிறான், சங்கிலி திருமணத்திற்கு விருப்பம் என சக்தியிடம் சொல்வது மட்டுமல்லாமல், நான் ஒரு ரவுடி தான் உன்னை திருமணம் செய்தால் இது எல்லாத்தையும் விடுவேன் என சங்கிலி சக்தியிடம் சொல்ல ஷக்தியும் யோசிக்க அப்போது வெற்றி வருகிறான். அடுத்து என்ன நடக்கும் என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: TV Serial, Zee Tamil Tv