முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பரபர சண்டை.. கார்த்திக்கை வீட்டை விட்டு வெளியே அனுப்பிய மீனாட்சி 'மீனாட்சி பொண்ணுங்க' சீரியல் அப்டேட்

பரபர சண்டை.. கார்த்திக்கை வீட்டை விட்டு வெளியே அனுப்பிய மீனாட்சி 'மீனாட்சி பொண்ணுங்க' சீரியல் அப்டேட்

மீனாட்சி பொண்ணுங்க

மீனாட்சி பொண்ணுங்க

கார்த்திக்கை வீட்டை விட்டு வெளியே அனுப்பிய மீனாட்சி, கோகிலா வாங்கிய சத்தியம் என மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கல் கோவிலில் சாமியிடம் வேண்டி முடித்துவிட்டு மீனாட்சி வீட்டிற்குள் வருகிறாள். அங்கே கார்த்திக்கை பார்த்து அதிர்ச்சி அடைந்து கோபமாக கார்த்திகை திட்டுகிறாள்.

உன்னால் தான் என் பெண் யமுனாவின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது என்றெல்லாம் கார்த்திக்கத் திட்ட, கார்த்திக்கும் மன்னிப்பு கேட்டு தன் சூழ்நிலையை விளக்குகிறான். ஆனால் மீனாட்சி சமாதானம் அடையாமல், கார்த்திக்கை வெளியே போக சொல்கிறாள்.

அதன் பிறகு கார்த்திக் வெளியே போக அந்த நேரத்தில் கார்த்திக்கின் அப்பா போன் செய்து மருத்துவமனையில் கோகிலா இருப்பதை கூற உடனே கார்த்திக் மருத்துவமனை செல்கிறான். அங்கு மருத்துவர்கள் அதிர்ச்சியான செய்தியை கோகிலாவிடம் சொல்லக்கூடாது என்று சொல்ல, கோகிலா யமுனாவை கல்யாணம் செய்யக்கூடாது என்றும் தான் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்று சத்தியம் வாங்குகிறாள்.

மறுப்பக்கம் வெற்றியும் சக்தியும் சந்தோஷமாக இருப்பதை பார்த்து ஏன் பொறாமை படுகிறாய் என்று சரண்யா பூஜாவை கேட்க சரண்யாவுக்கும் பூஜாவுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. கோபமாக சென்ற பூஜா அவள் ரூமில் உள்ள பொருட்களை எல்லாம் போட்டு உடைக்கிறாள்.

அந்த சத்தம் கேட்டு அங்கே சென்ற சரண்யா கோபத்தில் தூக்கி போட்டு உடைக்க எங்கள் வீட்டுப் பொருள் தான் கிடைத்ததா என்று பூஜாவிடம் கேட்க, அப்போது பூஜா ஒரு பொருளை தூக்கி எரியப் போகும்போது பூஜாவுக்கு சரண்யாவுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட, சரண்யாவிற்கு மண்டையில் அடிபட்டு சரண்யா மயக்கம் அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv