ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் யமுனாவை கார்த்திக் சமாதானப்படுத்தி தன் வீட்டில் ஹோம் நர்சாக வந்து இருக்குமாறு கூறுகிறான். துர்காவும் யமுனாவை போகும் படி சொல்கிறாள்.
இதனால் யமுனா மீனாட்சியிடம் டைலரிங் கோர்ஸ் ஒரு மாதம் ஒரு இடத்தில் தங்கி படிக்க வேண்டும் என்று கூற மீனாட்சி மறுத்து பின் ஒப்புக் கொள்கிறாள். அதன்பிறகு யமுனா கோகிலாவின் வீட்டுக்கு செல்கிறாள்.
யமுனாவை பார்த்த கோகிலா அதிர்ச்சி அடைந்து இவள் ஏன் இங்கு வந்திருக்கிறாள்? என்று கார்த்திக்கிடம் கேட்க, மீனாட்சி வீட்டில் என்னிடம் ஒரு லட்ச ரூபாய் பணம் வாங்கி இருக்கிறார்கள் அதை உங்களிடம் நான் மறைத்து விட்டேன். அந்த பணத்தை அவர்களால் தர முடியாது அதனால் யமுனா இங்கு வேலை செய்தால் அந்த பணத்தை கழித்துக் கொள்ளலாம், வேறு நர்ஸ் வைத்தாலும் நாம் தான் பணம் கொடுக்க வேண்டும் என்று கூற, வேறு வழி இல்லாமல் கோகிலா ஒப்புக் கொள்கிறாள்.
ஆனால் யமுனாவிடம் கார்த்திக்குடன் நெருங்கி பழகக் கூடாது. நீ இந்த வீட்டில் வேலைக்காரி தான் என்று கூறுகிறாள். கார்த்திக் யமுனாவிடம் தற்சமயம் சூழ்நிலைக்கு ஏற்றபடி நடந்து கொள். நீ இங்கிருந்தால் எனக்கும் உன்னை பார்த்தது போல் இருக்கும் என்று கூற கார்த்திக் கூறும் காரணத்திற்காகவும் அந்த சூழ்நிலைக்காகவும் யமுனா கோகிலா வீட்டில் இருக்க ஒப்புக்கொள்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: TV Serial, Zee Tamil Tv