ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிச்சைக்காரனை திருமணம் செய்யப் போகும் சக்தி - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்!

பிச்சைக்காரனை திருமணம் செய்யப் போகும் சக்தி - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்!

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

பிச்சைக்காரனை திருமணம் செய்யப் போகும் சக்தி, வெற்றி முடிவு என்ன என மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இன்றைய எபிசோடில் பரிகாரம் செய்ய சென்ற வெற்றி இன்னும் வரவில்லை என பூஜா புலம்ப அவளை ரங்கநாயகி ஆறுதல்படுத்தி மணமேடையில் உட்கார வைக்கிறாள்.

அடுத்து கோபத்தில் இருக்கும் சக்தி, தன் கல்யாணம் நிற்க காரணமான வெற்றியை தன் கழுத்தில் தாலி கட்ட சொல்ல, அவன் மறுக்கிறான். நீ மறுத்தால் பிச்சைகாரனை வைத்து தாலி கட்டிக் கொள்வேன் என பிச்சைகாரனை நோக்கி சக்தி செல்ல, வெற்றி அவள் கையை பிடித்து இழுத்து வந்து அவளுக்கு தாலி கட்டுகிறான்.

அடுத்து சங்கிலியை சமாதனப்படுத்தி தாலி கட்ட அழைத்து வந்த புஷ்பா கோவத்தில் சக்தியை திட்டுகிறாள். சக்தியை புஷ்பா நிம்மதியாக வாழ விட மாட்டேன் என எச்சரித்து விட்டு செல்கிறாள்.

அடுத்து கோகிலா தன் மகன் கார்த்திக்கை அழைத்து கொண்டு செல்ல முற்படும் போது , சக்தி சத்தியம் செய்து கொடுத்தது போல் யமுனா, கார்த்தி நிச்சயதார்த்தத்தை நடத்த சொல்கிறாள். என் மகனை அடித்த வெற்றியை நீ திருமணம் செய்து கொண்டதால் நிச்சயதார்த்தத்திற்கு சம்மதிக்க முடியாது என்று கோகிலா சொல்கிறாள்.

உடனே கார்த்திக் அம்மாவிம் கொடுத்த சக்தியத்தை மீறக் கூடாது என கோவமாய் பேசி நிச்சயதார்த்தத்தை நடத்த சொல்ல அதற்க்கு கார்த்திக்கின் அப்பா இதற்கு வாய்ப்பில்லை என்று கார்த்திக்கை திட்டி நிச்சயதார்த்தத்தை நடக்க விட மாட்டேன் என்று சொல்ல, சக்தி அதிர்ச்சியடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Also read... ரஜினியின் பொங்கல் வெற்றிக்கு கை கொடுத்த பிறமொழிப் படங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv