ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சங்கிலியை சமாதானம் செய்யும் நீதிமணி.. மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

சங்கிலியை சமாதானம் செய்யும் நீதிமணி.. மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

மீனாட்சி பொண்ணுங்க

மீனாட்சி பொண்ணுங்க

சங்கிலியை சமாதானம் செய்யும் நீதிமணி, அடுத்து நடக்க போவது என்ன என மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இன்றைய எபிசோடில் தாலி கட்டாமல் கோபித்துக் கொண்டு வெளியேறிய சங்கிலியை அக்கா புஷ்பாவும் நீதிமணியும் சமாதானப்படுத்துகிறார்கள். ஆனால் அவன் சமாதானம் அடையவில்லை, மேலும் சக்தியை பற்றி தப்பாக சொல்கிறான். வெற்றி சக்தியை கல்யாணம் செய்வதற்காக வெற்றியின் நண்பர்கள் திட்டமிட்ட சதி என, புஷ்பா சங்கிலிக்கு புரிய வைக்கிறாள்.

மறுபக்கம் கல்யாண மண்டபத்தில் வெற்றி வந்து விடுவான் என்று பூஜா பரபரப்பாக காத்துக் கொண்டிருக்கிறாள். இதற்கிடையில் கல்யாணம் நடந்துவிடுமோ என்ற பதட்டத்தில் இருக்கும் மீனாட்சி சாமியை வேண்ட, சாமி எதுவும் நடக்காது என்று கூறுகிறது.

பிறகு மீனாட்சி கல்யாணம் நடக்கும் இடத்திற்கு போகலாமா, வேண்டாமா, என்று யோசித்துக் கொண்டிருக்கிறாள். கோபத்தில் இருந்த சக்தி தாலியை எடுத்து வெற்றியை கட்ட சொல்கிறாள். வெற்றி குழப்பத்தில் இருக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Also read... துணிவு, வாரிசு படத்திற்கு சிறப்பு காட்சிகள் திரையிட்ட தியேட்டர்களுக்கு நோட்டீஸ்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv