ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஷக்தியிடம் சங்கிலி கேட்ட அடுக்கடுக்கான கேள்விகள் - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

ஷக்தியிடம் சங்கிலி கேட்ட அடுக்கடுக்கான கேள்விகள் - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

நின்று போன திருமணம், ஷக்தியிடம் சங்கிலி கேட்ட அடுக்கடுக்கான கேள்விகள் அடுத்து நடக்கப்போவது என்ன என மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மணமேடையில் உட்கார்ந்து இருக்கும் சங்கிலி தாலி கட்டாமல் எழுந்து கொள்ள சாந்தா காரணம் கேட்க அதற்கு சங்கிலி சக்தி தவறானவள் என்று பொதுவாக சொல்கிறான்.

எதை வைத்து சொல்கிறாய் என்று அனைவரும் சங்கிலியை கேட்க சக்தி சங்கிலியிடம் எதை வைத்து என்னை தவறானவள் என்கிறாய் என்று கேட்க நேற்று இரவு நீ எங்கே சென்றிருந்தாய் என்று சங்கிலி கேட்க சக்தி மட்டுமில்லாமல் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

உடனே சக்தி செல்வாவை பார்க்க போயிருந்ததாக சொல்ல சங்கிலி அவளை கிண்டல் செய்தபடி அடுத்தடுத்து கேள்விகளை கேட்கிறான். ஏன் நான் கொடுத்த கூரை புடவையை கட்டவில்லை என்று கேட்க பிளாஷ் பேக்கில் சக்தி அதை எரித்து விட்டதை நினைத்துப் பார்க்கிறாள்.

புடவை பற்றி சங்கிலி விளக்கம் கேட்க சக்தி புடவை எரித்து விட்டதாக அனைவரது முன்னிலையில் சொல்ல புஷ்பா டென்ஷன் ஆகிறாள். மேலும் நீதிமணி புஷ்பா இருவரும் சக்தி கழுத்தில் தாலி கட்ட சொல்லி சங்கிலியிடம் கெஞ்சுகின்றனர்.

ஆனால் சங்கிலி தாலி கட்ட போகும்போது வெற்றி வருவதை பார்த்து தாலியை கீழே போட்டுவிட்டு கோபமாக அங்கிருந்து செல்ல மீனாட்சி சாமியிடம் நன்றி சொல்லி கண் கலங்குகிறாள். சங்கிலி கிளம்பி விட்டதை பார்த்த கோகிலா இனி நிச்சயதார்த்தம் நடக்காது என்று பிரச்சனை செய்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Also read... மார்வெல் பட ஆசை.. இந்த நடிகர் பிடிக்கும்.. மனம் திறந்த ஜூனியர் என்டிஆர்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv