ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சக்திக்கு தாலி கட்டாத சங்கிலி... நடந்தது என்ன? - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

சக்திக்கு தாலி கட்டாத சங்கிலி... நடந்தது என்ன? - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

சக்தி கழுத்தில் தாலி கட்டாமல் எழுந்த சங்கிலி, கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி என மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரங்கநாயகியிடம் ஏதோ ரகசியம் சொல்ல வந்து பூஜாவின் மிரட்டலால் சொல்ல முடியாமல் திகைத்து நிற்கிறாள் சரண்யா.

அடுத்து கல்யாணத்தில் பன்னீர் சொம்பு காணவில்லை என்று ஏதோ ஏதோ சொல்லி சமாளிக்க ரங்கநாயகி சரண்யாவை திட்டி விட்டுப் போகிறாள்‌. பிறகு பூஜா சரண்யாவிடம் எங்களை பற்றி ரங்கநாயகியிடம் சொன்னால் கணவனை விட்டு பிரிந்து இருக்கும் நீ எப்படி கர்ப்பமானாய் என்று உன் நடத்தையை தப்பாக சொல்லி விடுவேன் என்று மிரட்டி அனுப்புகிறாள்.

அதனைத் தொடர்ந்து கோவிலுக்கு செல்வா வந்திருக்கும் விஷயத்தை துர்கா யமுனாவிடம் சொல்கிறாள். கோயிலில் இருந்து செல்வா புறப்படும் போது அம்மன் சாமி செல்வாவை அழைக்கிறாள். என் பின்னாடி வா என்று செல்வாவை கூட்டி செல்கிறாள்.

சங்கிலி மனமேடைக்கு வர தாமதமானதால் இந்த கல்யாணம் நடக்காது "வா நாம் கிளம்பலாம் "என்று கார்த்திக்கை கோகிலா அழைக்க அப்போது சங்கிலி மேடைக்கு வந்து சக்தியின் அருகில் உட்காருகிறான். சங்கிலி சக்திக்கு தாலி கட்டி விடுவானோ என்று பயத்திலிருந்த மீனாட்சி சாமியை வேண்டி கத்தியை கழுத்தில் வைக்க தீர்மானிக்கும் போது மீனாட்சியை சாமி வந்து காப்பாற்றி கொஞ்சம் பொறுமையாக இரு என்று சொல்கிறது.

அதன் பிறகு சக்தியின் கழுத்தில் தாலி கட்ட போகும் சங்கிலி தாலியை வைத்து யோசித்தவாறு இருந்தவன் சக்தியின் கேரக்டர் சரியில்லை என்று தாலி கட்டாமல் எழுந்து விடுகிறான். இதனால் சக்தி அதிர்ச்சி அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Also read... பாகவதரை தவிர்த்து சிவாஜியை ஹீரோவாக்கிய லேனா செட்டியார்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv