ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சக்தி, சங்கிலி கல்யாணத்தை நிறுத்த கார்த்தி எடுத்த முடிவு - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்!

சக்தி, சங்கிலி கல்யாணத்தை நிறுத்த கார்த்தி எடுத்த முடிவு - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்!

மீனாட்சி பொண்ணுங்க

மீனாட்சி பொண்ணுங்க

சக்தி, சங்கிலி கல்யாணத்தை நிறுத்த கார்த்தி எடுத்த முடிவு, அடுத்து நடக்கப் போவது என்ன என மீனாட்சி பொண்ணுங்க சீரியலில்  இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இன்றைய எபிசோடில் கிரி, திடியன் இருவரும் வெற்றிக்கு பரிகாரம் செய்யும் அய்யர் மூலம் வெற்றியின் பரிகாரத்தை தாமதப்படுத்துகின்றனர். அடுத்து யமுனா, சக்தியின் நிலைமை பற்றி வருத்தப்பட்டு கார்த்தியிடம் பேசுகிறாள். அதன் பிறகு கார்த்திக் தாலியை எடுத்து கட்ட போக யமுனா கண்கலங்கி அழுகிறாள்.

அப்பொழுது அங்கு வரும் துர்கா யமுனா கார்த்திக்கிடம் சமாதானம் பேசி அனுப்பி வைக்கிறாள். மேலும் சங்கிலி கோபத்துடன் ஒரு இடத்தில் நின்று கொண்டிருக்க புஷ்பா நீதிபதி இருவரும் அவனை சமாதானப்படுத்தி கூட்டிச் செல்கின்றனர்.

சங்கிலி வெற்றியின் எதிரே செல்ல வெற்றி அதை கவனிக்காமல் சென்று விடுகிறான். அதன் பிறகு விளக்கேற்றி பரிகாரம் செய்யும் வெற்றியிடம் துர்கா வந்து சக்தியின் திருமணம் இந்த கோவிலில் நடைபெறுவதாக சொல்கிறாள்.

அடுத்து துர்கா வெற்றியை குற்றம் சொல்லி செல்வதை திடியனிடம் வெற்றி சொல்ல அவர்களும் ஆமாம் என்று சொல்ல வெற்றி அப்சட்டாக நிற்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Also read... தொடங்கியது விஷால் - கார்த்திக் தங்கவேலு படத்தின் பணிகள்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published: