ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சங்கிலியை கத்தியால் குத்திய மீனாட்சி - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்!

சங்கிலியை கத்தியால் குத்திய மீனாட்சி - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்!

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

சங்கிலியை கத்தியால் குத்திய மீனாட்சி, கடைசியில் காத்திருந்த ஏமாற்றம் அடுத்து நடக்கப்போவது என்ன என மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சரண்யா கொடுத்த தகவலால் திடியனும் கிரியும் பூஜாவின் அடியாளை பிடித்து ஒரு மூட்டையில் போட்டு கட்டி வைக்கின்றனர்.

அடுத்து மீனாட்சி சங்கிலியை கத்தியால் குத்தி கொலை செய்ய சங்கிலி ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுகிறான். பின்பு மீனாட்சிக்கு அது கனவு என்று தெரிய வருகிறது.

இதனையடுத்து கத்தியுடன் மீனாட்சி யோசித்துக் கொண்டிருக்க அங்கு வந்த ஒரு சிறு பெண் குழந்தை மீனாட்சியின் கைப்பிடித்து முத்தம் கொடுக்க, அந்த குழந்தை மீனாட்சி பிரசவம் பார்த்ததால் உயிர் பிழைத்தது என்று தாய் கூறுகிறாள்.

பிறகு மீனாட்சி கடவுளிடம் என்னால் அவனை கொலை செய்ய முடியவில்லை என்று வருந்த மீனாட்சி சாமியிடம் சக்தி கழுத்தில் சங்கிலி தாலி கட்டினால் நான் உயிருடன் இருக்க மாட்டேன் என்று சொல்லி சத்தியம் செய்கிறாள்.

மறுபக்கம் கிரி, திடியன் என இருவரும் ஐயர் முன்னிலையில் வெற்றியின் பரிகாரத்தில் ஐயருடன் சேர்ந்து கொண்டு பரிகாரம் செய்யும் நேரத்தை கடத்துகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Also read... வாரிசு - துணிவு படங்கள் சிறப்பு காட்சிகள்... அச்சத்தில் திரையரங்கு உரிமையாளர்கள்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv