ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சக்தி, சங்கிலி கல்யாணம் நடக்கும் கோவிலுக்கு வரும் வெற்றி - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

சக்தி, சங்கிலி கல்யாணம் நடக்கும் கோவிலுக்கு வரும் வெற்றி - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

சக்தி, சங்கிலி கல்யாணம் நடக்கும் கோவிலுக்கு வரும் வெற்றி, அடுத்து நடக்கப்போவது என்ன என மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சக்தி சங்கிலி கல்யாணம் ஒரு பக்கம் வெற்றி பூஜா கல்யாணம் ஒரு பக்கம் என பரபரப்பாக வேலைகள் நடந்து வரும் நிலையில் மீனாட்சி சாமியிடம் தன் நிலைமையை சொல்லி புலம்புகிறாள்.

மறுபக்கம் மண்டபத்தில் வெற்றியும் பூஜாவும், மணவறையில் உட்கார்ந்திருக்கிறார்கள். வெற்றியின் அங்கவஸ்த்திம் திடியனால் எரிக்கப்படுகிறது. இதனால் இது அபசகுணம் என ஐயர் சொல்ல பரிகாரம் செய்ய வெற்றி கோவிலுக்கு செல்கிறான்.

மேலும் பூஜா ஒரு அடியாளை அனுப்ப, அவன் வெற்றியை பாலோ செய்து செல்கிறான். சக்தியை கங்கன கயிர் கட்ட ஐயர் அழைத்து செல்ல, அதே கோவிலுக்கு வெற்றி வந்திருக்க இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் இருக்கின்றனர்.

அடுத்ததாக கோவிலில் ஒரு பாட்டி சங்கிலியை சந்தித்து செல்வா சக்தி இருவரும் தன் வீட்டில் தங்கியிருந்த விஷயம் பற்றி பேசுகிறாள். இதை கேட்ட சங்கிலி கோபத்துடன் அங்கிருந்து கிளம்பி செல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Also read... டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கிற்காக நேரடியாக மோதிக்கொள்ளும் போட்டியாளர்கள் - வெளியானது பரபர ப்ரோமோ வீடியோ!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv