முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / காலில் ஆணி குத்தியதால் சக்தியை அலேக்காக தூக்கிய வெற்றி - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

காலில் ஆணி குத்தியதால் சக்தியை அலேக்காக தூக்கிய வெற்றி - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

காலில் ஆணி குத்தியதால் சக்தியை அலேக்காக தூக்கிய வெற்றி, திட்டி தீர்த்த ரங்கநாயகி என மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சக்தி வெற்றியை திட்டிவிட்டு மீனாட்சியிடம் நீயே பேசிக்கொள் என்று யமுனாவிடம் சொல்லிவிட்டு கோபமாக போய் விடுகிறாள்.

அப்போது வழியில் சக்தி காலில் ஒரு ஆணி குத்தி விட அதை பார்த்து பின்னால் வந்த வெற்றி அவளுக்கு உதவி செய்து, காரில் உட்கார வைக்கிறான். ஆனால் அவள் காரில் இருந்து இறங்க முற்படுகிறாள்.நடந்தால் செப்டிக் ஆகிவிடும் என்று கோபத்தில் அவள் கைகளை கட்டி வீட்டிற்கு அழைத்து செல்கிறான் வெற்றி. பிறகு வீட்டிற்க்குள் அவளை தூக்கி கொண்டு வருகிறான்.

எல்லோரும் பார்க்க, காலில் முள் குத்தியதற்கே இப்படியா என்று ரங்கநாயகியும் வெற்றியை திட்டுகிறாள். வெற்றி சக்தியை தூக்கிக் கொண்டு தன் அறைக்கு செல்ல, பூஜாவை பார்த்துவிட்டு அவர்கள் வேண்டுமென்றே கொஞ்சிக் கொஞ்சி பேசுவது போல் நடிக்க பூஜா எரிச்சலடைகிறாள். இதனால் அவர்களுக்கு வழி விட மறுக்கிறாள்.

அதன் பிறகு வெற்றி பூஜாவை இடித்து தள்ளி விட்டு சக்தியை தன் அறைக்குள் அழைத்து சென்று உட்கார வைக்கிறான். வெளியில் சென்று விட்டு வீட்டுக்குத் திரும்பிய மீனாட்சி கல்கோவிலில் அமர்ந்து யமுனாவுக்கு என்னால் ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க முடியவில்லை, அவள் விருப்பப்படி கல்யாணமும் செய்து வைக்க முடியவில்லை, ஏதாவது நல்லது செய் என்று சாமியிடம் வேண்டிக் கொள்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv