முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / யமுனா- கார்த்திக்கு கல்யாணம் செய்ய வெற்றி எடுத்த முயற்சி - 'மீனாட்சி பொண்ணுங்க' சீரியல் அப்டேட்

யமுனா- கார்த்திக்கு கல்யாணம் செய்ய வெற்றி எடுத்த முயற்சி - 'மீனாட்சி பொண்ணுங்க' சீரியல் அப்டேட்

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

யமுனா, கார்த்திக்கு கல்யாணம் செய்ய வெற்றி எடுத்த முயற்சி, யமுனா கொடுத்த அதிர்ச்சி என் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.  இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வெற்றி கோகிலாவுக்கு சாதகமாக பேசுவது போல் பேசி கார்த்திகை வெளியே அழைத்து வருகிறான். பிறகு யமுனாவுக்கு கல்யாணம் நடக்க இருப்பதாக, வெற்றி கார்த்திக்கிடம் பொய் சொல்லி அழைத்துப் போகிறான். கல்கோவிலில் சாந்தா சாமியிடம் வேண்டிக் கொள்ள அங்கே யமுனா வர யமுனாவிடம் கோவிலில் கார்த்திக்கிற்கு ஒரு மணி நேரத்தில் கல்யாணம் நடக்க இருப்பதாக சொல்லி யமுனாவை கோயிலுக்கு அழைத்து வருகிறாள்.

அதே கோவிலுக்கு கோகிலாவும் கனகலிங்கமும் வர, பூஜாவும் அதே கோவிலுக்கு வருகிறாள்‌. ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளாமல் ஆங்காங்கே சாமி கும்பிட்டு கொண்டிருக்க, கோவிலுக்கு வந்த யமுனாவும் கார்த்திக்கும் சந்தித்துக் கொள்ள, இருவருக்கும் கல்யாணம் செய்ய பொய் சொல்லி வெற்றி தான் அழைத்து வர சொன்னதாக சாந்தா கூறுகிறாள்.

அம்மாவுக்கும் சக்திக்கும் தெரியாமல் இந்த கல்யாணம் வேண்டாம் என யமுனா மறுக்கிறாள். இருப்பினும் வெற்றி யமுனாவை சமாதானப்படுத்துகிறான்.

உடனே யமுனா சக்தி எங்கே என்று யமுனா கேட்க, வெற்றி பதில் சொல்லாமல் இருக்க, சக்தி சொன்னால் கல்யாணம் செய்து கொள்வேன் என்று யமுனா சொல்ல, அனைவரும் அதிர்ச்சியாகிறார்கள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv