முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / வெற்றியை அவமானப்படுத்தும் பூஜா - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

வெற்றியை அவமானப்படுத்தும் பூஜா - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

வெற்றியை அவமானப்படுத்தும் பூஜா, தற்கொலை செய்ய துணியும் யமுனா அடுத்து நடக்கப்போவது என்ன என மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட். 

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வேலைக்கு ஏன் செல்ல வேண்டும் என்று ரங்கநாயகி வெற்றியைக் கேட்க வெற்றியோ அதற்கு நீங்கள் தான் காரணம், வேலைக்கு  சென்றே ஆக வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறான்.

அடுத்து ரங்கநாயகி நமக்கிருக்கும் சொத்துக்களை பராமரித்தாலே போதுமே என்று கூற, இந்த நேரத்தில் பூஜா வெற்றியை வேலைக்கு செல்லாதவன் என்று அவமானப்படுத்துவது போல் பேச, கோபம் கொண்ட வெற்றி சுவற்றில் தன் கைகளை குத்திக் கொள்கிறான்.

அடுத்து அங்கு வந்த சக்தி அவனை தடுத்து அவன் கைகளுக்கு மருந்து தடவுகிறாள். கோவிலுக்குச் சென்ற திடியனிடமும் வெற்றியிடமும் மீனாட்சி யமுனாவுக்கு சீக்கிரம் கல்யாணம் செய்ய வேண்டும் இல்லை என்றால் சில வருடங்களுக்கு கல்யாணமே ஆகாது என்று வருத்தப்படுகிறாள்.

அடுத்து கார்த்திக்கு வேறு பெண் பார்க்கிறார்கள் என்ற தகவல் வர அதை உறுதிப்படுத்த வெற்றியும் திடியனும் பெண் பார்க்கும் வீட்டிற்கு சென்று கொரியர் பாய் போல் நடித்து கார்த்திக்கு பெண் பார்க்கும் விஷயத்தை தெரிந்து கொள்கின்றனர்.

பிறகு வெற்றி கார்த்திகை சந்தித்து உன் அம்மா வேறு இடத்தில் பெண் பார்க்கிறார்கள் என்ற தகவலை சொல்கிறான். மனம் வெறுத்த யமுனா தற்கொலை செய்து கொள்வதற்காக ஒரு கிணற்றின் அருகே வந்து நிற்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv