ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பணம் ஏற்பாடு செய்து பத்திரத்தை ரங்கநாயகியிடம் ஒப்படைத்து விட்ட வெற்றி வேகமாக யமுனாவின் கல்யாணத்திற்கு புறப்படுகிறான்.
இந்த பக்கம் கோகிலாவிடம் பேசி எப்படியாவது கல்யாணத்தை நடத்தி விடலாம் என்று வேகமாக வந்த சக்தி கல்யாண மண்டபத்தில் யாரும் இல்லாமல் கல்யாணம் நின்று போய் யமுனாவும் மீனாட்சியும் அழுது கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள்.
பிறகு சக்தி ஒன்றும் செய்ய இயலாமல் நின்று அழுகிறாள். மீனாட்சி எல்லாம் உன்னால் தான் என்று சக்தியை திட்டுகிறாள். அப்போது அங்கு வெற்றி வந்து நிற்க. சக்தி வெற்றியை திட்டுகிறாள்.
அடுத்து சத்தி ரங்கநாயகியின் வீட்டுக்குள் செல்லாமல் வெளியில் நிற்கிறாள் எல்லோரும் வீட்டுக்குள் வர சொல்லி கெஞ்சிகிறார்கள் ஆனால் அவள் இந்த பத்திரம் எப்படி மாறியது என்று கண்டுபிடிக்காமல் நான் வீட்டுக்குள் வர மாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கிறாள்.
சாப்பிடாமல் துவண்டு போய் இருக்கும் சக்திக்கு சரண்யா சாப்பாடு கொண்டுவர பூஜா இது வெற்றி சம்பாதித்த சாப்பாடு தான் நன்றாக சாப்பிடு என்று கிண்டல் செய்கிறாள். சக்தி மயக்கம் அடைந்து கீழே விழ, வெற்றியும் சரண்யாவும் அவளுக்கு முதலுதவி செய்கிறார்கள்.
இந்த பக்கம் மீனாட்சி வீட்டில் அனைவரும் சோகமாக இருக்க சாந்தா ஆறுதல் சொல்கிறாள். மேலும் யமுனாவுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்க, யமுனா நடந்து சம்பவங்களை எல்லாம் மறந்து வழக்கம் போல் பாத்திரம் கழுவி எடுத்துக் கொண்டு வருகிறாள்.
இப்பொழுது யமுனா எல்லோருக்கும் ஆறுதல் சொல்ல மீனாட்சி யமுனாவை அழைத்துச் சென்று சாமி படத்தின் முன் நல்லது நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறாள்.
இங்கே காய்ச்சலில் இருக்கும் சக்திக்கு இரவு முழுக்க வெற்றி பணிவிடை செய்து பார்த்துக் கொள்கிறான்.
மறுநாள் காலையில் சரண்யா வந்து சக்திக்கு ஆறுதல் சொல்லி வெற்றி பத்திரத்தை மாற்றி இருக்க மாட்டான் ஏன் பூஜா செய்திருக்கக் கூடாது என்று சரண்யா சொல்ல சக்தி யோசிக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: TV Serial, Zee Tamil Tv