ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வீட்டை விட்டு ஓடி போகும் வெற்றி, சக்தி? - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

வீட்டை விட்டு ஓடி போகும் வெற்றி, சக்தி? - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

வீட்டை விட்டு ஓடி போகும் வெற்றி, சக்தி? திடியன் செய்யும் சூழ்ச்சி  அடுத்து நடக்க போவது என்ன என மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வெற்றி விஷம் குடித்து விட்டதாக போனில் திடியன் சொன்னதால் சக்தி வேகமாக வெளியே கிளம்பிச் செல்கிறாள். கிரி இதை சங்கிலியிடம் காட்ட சங்கிலி சக்தியை பின் தொடர்ந்து செல்கிறான்.

திடியன் வெற்றியிடம் சக்தி விஷம் குடித்து விட்டதாக சொல்ல வெற்றி வேகமாக ஜீப்பை எடுத்துக் கொண்டு கிளம்புகிறான். அடுத்து பூஜா ரங்கநாயகியிடம் வெற்றி, சக்தி இருவரும் வீட்டை விட்டு ஓடி போவதாக சொல்ல ரங்கநாயகி பூஜாவுடன் கிளம்பி வருகிறாள்.

அடுத்து சக்தியை தேடி வரும் வெற்றி எதிரில் சக்தி வருவதை பார்த்து அதிர்ச்சியுடன் ஜீப்பில் இருந்து இறங்கி சக்தியிடம் விசாரிக்க பின்னால் வரும் சங்கிலி, கிரி இருவரும் மறைத்திருந்து இருவரும் பேசுவதை கேட்கின்றனர்.

அடுத்து சக்தி இரண்டு நாளில் திருமணம் இங்கே நின்று பேசிக் கொண்டிருந்தால் தவறாகிவிடும் என்று சொல்லி அங்கிருந்து கிளம்பி செல்ல ரங்கநாயகி வெற்றியின் ஜீப்பை வழி மறிக்க அதில் வெற்றி இருப்பதாக நினைத்து பேச பின்பு திடியன் இருப்பதை பார்த்து விசாரிக்கிறாள்.

வெற்றியின் பேக் ஜீப்பில் இருப்பதாக பூஜா சொல்ல பேக்கை திறந்து பார்க்க அதில் சரக்கு பாட்டில்கள் இருக்கின்றன. பின்னர் திடியன் வெற்றிக்கு தெரியாமல் நண்பர்களுக்கு பார்ட்டி கொடுக்க வந்ததாக சொல்கிறான்.

Also read... ஷாருக் கானின் ’பதான்’ படத்தில் சில காட்சிகளை மாற்றச் சொன்ன சென்சார் போர்டு!

மேலும் வெற்றிக்கு போன் செய்யும் பூஜா வெற்றியின் போன் சுவிட்ச் ஆப் ஆகியிருக்க அவன் வீட்டை விட்டு ஓடி போய் விட்டதாக சொல்லி ரங்கநாயகியை வீட்டிற்கு வந்து பார்க்க சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv