ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ரங்கநாயகிக்கு சக்தி கொடுத்த பதிலடி - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

ரங்கநாயகிக்கு சக்தி கொடுத்த பதிலடி - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

மீனாட்சி பொண்ணுங்க

மீனாட்சி பொண்ணுங்க

ரங்கநாயகிக்கு சக்தி கொடுத்த பதிலடி, அடுத்து நடந்தது என்ன என மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சக்தியிடம் வெற்றியின் கேசை வாபஸ் வாங்க சொல்லி ரங்கநாயகி மீனாட்சி வீட்டிற்கு வருகிறாள். சக்தியிடம் பேச கேஸை வாபஸ் வாங்க போக சக்தி ரங்கநாயகியின் மகனை தவறாக பேசி கேசை வாபஸ் வாங்க முடியாது, கையெழுத்து போட முடியாது என்று சண்டை போடுகிறாள்.

அப்பொழுது அங்கு வரும் மீனாட்சி ரங்கநாயகியை வீட்டிற்குள் அழைத்து செல்கிறாள். சக்தி தன்னுடைய மகள் தான் என்று சொல்லி அவளை ஆசீர்வாதம் செய்ய சொல்வது ரங்கநாயகி கணக்குப்பிள்ளையிடம் சொல்லி ஒரு புதிய புடவையை கொடுத்து சக்தியை ஆசிர்வாதம் செய்கிறாள்.

ரங்கநாயகியின் மகன் மேல் ஏன் போலீசில் கம்பளைண்ட் கொடுத்தாய் என்று மீனாட்சி சக்தியிடம் கேட்க சக்தி சாந்தாவின் கணவனை அடித்த விஷயமாக நான் தான் கம்ப்ளைன்ட் கொடுத்தேன் என்று சொல்கிறாள். அதற்கு மீனாட்சி சாந்தா கூறியது அனைத்தும் பொய், உண்மையில் பணம் பறிபோன விஷயத்தால் நான் தான் போலீஸ் ஸ்டேஷன் சென்று கம்ப்ளைன்ட் கொடுத்தேன் என்று சொல்கிறாள்.

உன்னை சமாளிக்கவே சாந்தா பொய் கூறினாள் என்று உண்மையான காரணத்தை மீனாட்சி சக்தியிடம் சொல்ல துர்கா சக்தியிடம் சமாதானம் செய்ய அதைக் கேட்காமல் சக்தி புடவையை எடுத்து எரித்து விடுகிறாள். பின்பு தான் எரித்தது ரங்கநாயகி கொடுத்த புடவை அல்ல சங்கிலி கொடுத்த புடவை என்று தெரிந்து டென்ஷன் ஆகிறாள்.

அதனைத் தொடர்ந்து ரங்கநாயகி பூஜாவிடம் அவளுக்கு கிப்ட் வாங்கி வைத்திருப்பதாக சொல்ல பின்பு கணக்குப்பிள்ளை மூலம் அந்த புடவையை சக்தியுடம் கொடுத்து விட்ட விஷயம் தெரிந்து கணக்குப்பிள்ளையை திட்ட பூஜா பரவாயில்லை என்று சொல்லி அதே போல் வேறு புடவை எடுத்துக் கொள்ளலாம் என்று ரங்கநாயகியை சமாதானப்படுத்துகிறார்.

Also read... சிவாஜி உள்பட நான்கு முன்னணி நட்சத்திரங்கள் கௌரவ வேடத்தில் நடித்த ராமதாஸு

மேலும் துர்கா சக்தியிடம் கோபத்தில் எடுத்த முடிவு தவறாக போய்விடும் என்பதற்கு இந்த புடவையே உதாரணம் என்று சொல்லி அவளுக்கு அறிவுரை கூறுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv