ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சங்கிலியிடம் இருந்து சக்தியை காப்பாற்றிய வெற்றி - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

சங்கிலியிடம் இருந்து சக்தியை காப்பாற்றிய வெற்றி - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

மீனாட்சி பொண்ணுங்க

மீனாட்சி பொண்ணுங்க

சங்கிலியிடம் இருந்து சக்தியை காப்பாற்றிய வெற்றி, ரங்கநாயகியுடன் முட்டிய மோதல் அடுத்து நடக்க போவது என்ன என மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இன்றைய எபிசோடில் சங்கிலி தன் முகத்தை துணியால் மறைத்துக்கொண்டு இருட்டில் தனியாக வரும் சக்தியை கட்டிப்பிடிக்க முயற்சி செய்ய அவளது சட்டையை கிழித்து விடுகிறான்.

அப்பொழுது அங்கு வரும் வெற்றி சங்கிலியை அடித்து உதைக்க சங்கிலி வெற்றியிடமிருந்து தப்பித்து ஓடுகிறான். இதனால் பயத்தில் தனியாக நின்று கொண்டிருக்கும் சக்தியின் அருகில் வரும் நபரை சக்தி டார்ச் எடுத்துப் பார்க்க அது வெற்றி என தெரிந்து வருத்தத்துடன் நிற்கிறாள்.

அடுத்து வெற்றி சக்திக்கு அறிவுரை கூறி அவள் சட்டையை பார்த்து தனது சட்டையை கழட்டி அவளிடம் கொடுக்கிறாள். அடுத்து சக்தி வீட்டிற்கு சென்று அந்த சட்டையை பார்த்து வெற்றியை நினைத்து பீல் பண்ணுகிறாள்.

சங்கிலி மறுநாள் கல் கோவிலுக்கு வந்து அங்கு மீனாட்சியிடம் பாம்பு கொத்திய தன் நண்பன் இறந்து விட்டதாக சொல்லி தனக்கு பயத்தில் கை கால் நடுங்குவதாக சொல்ல மீனாட்சி முடிந்தால் நீ விளக்கேற்று என்று சொல்ல சாமியின் முன்பு சங்கிலி விளக்கேற்ற முயற்சி செய்கிறான். ஆனால் தீக்குச்சி பற்றிக்கொள்ளாமல் போக சங்கிலி விளக்கேற்ற முடியாமல் தவிக்கிறான். பின்னர் மீனாட்சி சங்கிலியை எச்சரித்து அனுப்புகிறாள்.

சங்கிலி சக்தியின் வீட்டிற்கு வர அங்கு சாந்தா சக்கிலிக்கு டீ கொடுப்பது போல் வந்து முகத்தை பார்க்க முகத்தில் இருக்கும் காயத்தை சக்தியிடம் சொல்ல சக்தி காயம் பற்றி விசாரிக்க சங்கிலி பாம்பு கொத்திய நண்பனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் தடுக்கி விழுந்து விட்டதாக சொல்லி சமாளிக்கிறான்.

மறுபக்கம் ரங்கநாயகி வக்கீலை வரவழைத்து வெற்றியின் கல்யாணத்திற்கு முன் அவன் மேல் இருக்கும் எல்லா கேசையும் கிளியர் செய்ய வேண்டும் என்று சொல்லி சக்தி கொடுத்திருக்கும் கேசை வாபஸ் வாங்க அவளிடம் கையெழுத்து வாங்க கிளம்பி செல்கிறாள்.

Also read... WATCH: வெளியானது பதான் படத்திலிருந்து இரண்டாவது பாடல் வீடியோ

மீனாட்சி மெஸ்க்கு வரும் ரங்கநாயகி சக்தியை பார்த்து இவள் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று நினைத்து கேசை வாபஸ் வாங்க கையெழுத்து போட சொல்ல சக்தி கையெழுத்து போட மறுக்க இருவருக்கும் சண்டை ஏற்படுகிறது. இதனால் அடுத்து நடக்கப் போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv