ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இன்றைய எபிசோடில் மீனாட்சி வீட்டின் பின்புறம் இருக்கும் சாமியின் அருகில் உட்கார்ந்து சங்கிலி மற்றும் நண்பர்கள் மது அருந்தி கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு வரும் நீதி மணி சங்கிலியை பார்த்து கல்யாண நடக்கும் வேலையில் ஏன் இப்படி குடிக்கிறாய் என திட்டுகிறார், மீனாட்சி வந்தால் பிரச்சனை ஆகிவிடும் என்று சொல்ல சமாளித்துக் கொள்ளலாம் என்று சங்கிலி சொல்லும் நேரத்தில் மீனாட்சி அங்கு வருகிறாள்.
உடனே நீதிமணி அங்கிருந்து கிளம்பி செல்ல சங்கிலி சாமியின் அருகில் குடித்துக் கொண்டிருப்பதை பார்த்த மீனாட்சி கோபப்பட்டு சங்கிலி மற்றும் நண்பர்களை திட்டுகிறாள். அவர்கள் மீனாட்சியை பதிலுக்கு கிண்டலாக பேச அப்போது சங்கிலி நண்பன் ஒருவனை பாம்பு கடித்து விட அனைவரும் அவனை ஹாஸ்பிடலுக்கு தூக்கிச் செல்கின்றனர்.
மறுபக்கம் வெற்றி வீட்டில் தன் போனில் சக்தி போட்டோவை பார்த்துக் கொண்டு ஒரு கையில் சக்தி கிப்டாக கொடுத்த தாஜ்மஹாலை வைத்து பார்த்துக் கொண்டிருக்க அப்போது அங்கு வரும் பூஜா வெற்றியிடம் கிண்டலாக பேசிவிட்டு செல்கிறாள்.
பின்பு மீண்டும் வந்து வெற்றியின் போனில் இருக்கும் போட்டோவை பார்க்க அது சக்தியின் போட்டோ என்று தெரிந்து கோபப்படுகிறாள். வெற்றி போனை புடுங்கி பூஜாவை திட்டுகிறான். பதிலுக்கு பூஜா திருமணத்திற்கு பின் தன்ராஜ்யம் தான் என்று எச்சரித்து விட்டு செல்கிறாள்.
பின்னர் பூஜாவின் அம்மா பூஜாவிடம் வெற்றிக்கு பாலில் மயக்க மருந்து கலந்து கொடுக்க சொல்ல பூஜா மயக்க மருந்து கலந்து கொண்டு வந்து வெற்றியிடம் கொடுக்க வெற்றி வேண்டாம் என்று சொல்ல ரங்கநாயகியை கூப்பிடுவேன் என்று பூஜா மிரட்ட வெற்றி பாலை வாங்கி குடித்து விடுகிறான். அடுத்து பாலை குடித்த வெற்றி சிறிது நேரத்தில் அங்கிருந்து கிளம்பி சென்று விடுகிறான்.
Also read... பாலா இயக்கத்தில் வணங்கானில் நடிக்கும் அருண் விஜய்? இணையத்தில் வைரலாகும் தகவல்
சங்கிலி நண்பர்களுடன் போதையில் மீனாட்சி வீட்டில் பின்புறம் நிற்கும் பொழுது மீனாட்சியை தேடி சக்தி டார்ச்சுடன் அங்கு வருகிறாள். சக்தியிடம் திருமணத்திற்கு முன் சில்மிஷம் செய்ய நினைக்கும் சங்கிலி ஒரு துணியை எடுத்து தன் முகத்தை மறைத்துக் கொண்டு சக்தியை நோக்கி வருகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: TV Serial, Zee Tamil Tv