முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / வெற்றியை வீட்டுக்கு அழைக்கும் மீனாட்சி - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்!

வெற்றியை வீட்டுக்கு அழைக்கும் மீனாட்சி - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்!

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

வீட்டுக்கு அழைக்கும் மீனாட்சி, வெற்றி எடுத்த முடிவு என்ன என மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இன்றைய எபிசோடில் கார்த்திக் சாப்பிட மீனாட்சியின் மெஸ்ஸுக்கு வருகிறான்‌. அப்போது யமுனாவுக்கு கார்த்திக் பரிசு கொடுக்கிறான்.

பின்னர் மீனாட்சி தன் மகள்களுக்கு கார்த்திகை தீபம் பூஜை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று சொல்கிறாள். மேலும் மீனாட்சி செல்வாவை பூஜைக்கு அழைக்க துர்காவை கேட்க துர்கா வெற்றியை கார்த்திகை தீபம் பூஜைக்கு இன்வைட் செய்கிறாள்.

Also read... WATCH - உச்சக்கட்ட கிளாமரில் தீபிகா படுகோன்.. ' பதான்' பட பாடல் - வீடியோ!

ஆனால் வெற்றி சக்தியை நேருக்கு நேர் சந்திப்பதற்கு யோசிக்கிறான். பிறகு மீனாட்சி தன் உயிரைக் காப்பாற்றிய வெற்றி கண்டிப்பாக பூஜைக்கு வரவேண்டும் என்று சொல்ல துர்காவின் கோரிக்கையை ஏற்று வெற்றி பூஜைக்கு வருவதாக சொல்கிறான்.

பின்னர் வெற்றி பூஜைக்கு வரும் விஷயம் தெரிந்து கொண்ட சக்தி மகிழ்ச்சி அடைகிறாள். மீனாட்சி வெற்றிக்காக அம்மனிடம் வேண்டிக் கொள்கிறாள்‌‌. சக்தி சமைப்பதாக சொல்லி காய்கறி நறுக்க சாந்தா, யமுனா, துர்கா மூவரும் சக்தி வெற்றிக்காக சமையல் செய்வதை கிண்டல் செய்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv