ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வெற்றி மீது கோபத்தில் வந்த சக்தி - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

வெற்றி மீது கோபத்தில் வந்த சக்தி - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

மீனாட்சி பொண்ணுங்க

மீனாட்சி பொண்ணுங்க

வெற்றி மீது கோபத்தில் வந்த சக்தி, உண்மை தெரிய வந்ததும் அடுத்து நடந்தது என்ன என மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோடு அப்டேட்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இன்றைய எபிசோடில் கோகிலா மற்றும் சங்கிலி என இருவரும் இரவு முழுவதும் வெற்றி வீட்டில் தங்கிய விஷயத்தை சொல்ல சக்தி கோபத்தோடு வீட்டுக்கு வந்து மீனாட்சிபுரம் அவனை எதுக்கு தங்க வச்சீங்க என சண்டையிடுகிறாள்.

இதனையடுத்து துர்கா அம்மாவை கொலை நினைத்த ரவுடிகள் இருந்து காப்பாற்றியது வெற்றி தான் என சொல்லி ரத்தக்கரையுடன் இருக்கும் அவனது சட்டையை எடுத்து வந்து கொடுக்க அதை சக்தி வாங்கி தவறாக நினைத்து விட்டோம் என வருத்தப்படுகிறார். அந்தச் சட்டையில் ரூமுக்கு வரும் சக்தி வெற்றியுடனான நினைவுகளை அசைப்போடுகிறார்.

பின்னர் வெற்றி ஜீப்பின் முன்னாள் உட்கார்ந்து கொண்டு வலி தாங்க முடியல வலிக்குது, மருந்து போடுங்கடா என்ன தன்னுடைய நண்பர்களிடம் சொல்கிறான். அதே சமயம் அதிகம் மருந்து போடணும் இல்லனா கொன்னுடுவேன் என சொல்ல முதலில் தயங்கும் நண்பர்கள் பிறகு சக்தி பற்றி பேச்சு கொடுத்துக் கொண்டே மருந்து போட தொடங்குகின்றனர்.

இந்த நேரத்தில் சக்தி அங்கு வர சக்தி பார்த்த வெற்றி நண்பர்கள் நைசாக விலகிக் கொள்ள சக்தி எதுவும் பேசாமல் வெற்றியின் பின்னால் நிற்கிறாள். அப்போது வெற்றி மருந்து போங்கடா வலிக்குது என கத்த சக்தி மருந்து போடுகிறாள்.

Also read... பிரபல இணையதளம் வெளியிட்ட டாப் 10 திரை நட்சத்திரங்கள் - முதலிடத்தை பிடித்த தமிழக நடிகர்!

அப்போது வெற்றி சக்தி பற்றி பேச அதை எல்லாம் கேட்டு கண் கலங்குகிறார் சக்தி. அவளது கண்ணீர் துளி வெற்றியின் முதுகில் விழுந்ததும் வெற்றி திரும்ப பார்த்து அதிர்ச்சி அடைகிறான். சங்கிலியை திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என அறிவுரை கூற முயற்சி செய்ய சக்தி இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கும் என உறுதியாக சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறாள். அடுத்து நடக்கப் போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv