ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மீனாட்சி வீட்டில் தங்கிய வெற்றி.. எச்சரித்த நீதிமணி - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

மீனாட்சி வீட்டில் தங்கிய வெற்றி.. எச்சரித்த நீதிமணி - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

மீனாட்சி வீட்டில் தங்கிய வெற்றி, எச்சரித்த நீதிமணி அடுத்து நடக்க போவது என்ன என மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இன்றைய எபிசோடில் சங்கிலி நீதிமணியிடம் வந்து வெற்றி இரவு முழுவதும் மீனாட்சி வீட்டில் தங்கியிருந்ததாக சொல்ல இதைக் கேட்டதற்கு மீனாட்சியும் வெற்றியும் தன்னை அவமானப்படுத்தி அனுப்பி விட்டதாக சொல்கிறாள்.

அடுத்து மீனாட்சி மெஸ்சில் வெற்றி காலை உணவை முடித்துக் கொண்டு வீட்டிற்கு கிளம்பி செல்கிறான். வெற்றி வெளியே செல்வதை அங்கிருந்து பார்த்துவிட்டு நீதிமணி மீனாட்சியிடம் ஒரு வாரத்தில் திருமணத்தை வைத்துக்கொண்டு வெற்றி என்ற ரவுடி வீட்டில் தங்கி செல்வது தவறாக இருக்கிறது என்று மீனாட்சியிடம் வாக்குவாதம் செய்கிறான்‌.

பின்னர் மீனாட்சி மெஸ்க்கு வரும் ஆட்களை வர வேண்டாம் என்று சொல்ல முடியாது என்று புஷ்பாவிடம் சொல்லுங்கள் என்று கூறி அனுப்புகிறாள். ஊரிலிருந்து வரும் சக்தி பஸ்ஸிலிருந்து இறங்கியவுடன் கோகிலாவிடம் இருந்து போன் வருகிறது. உடனே வரும்படி சொல்ல கோகிலாவை சக்தி சந்திக்க செல்லும் பொழுது அங்கு சங்கிலியும் இருக்கிறான்.

Also read... ’அடுத்த வாரிசு’ முதல் ’படையப்பா’ வரை வெள்ளிவிழா கண்ட ரஜினியின் படங்கள்!

பின்னர் கோகிலா ஒரு வாரத்தில் திருமணத்தை வைத்துக்கொண்டு உன் வீட்டில் ரவுடி பையன் தங்கியிருப்பதாக தகவல் வருவதாக சொல்ல சக்தியிடம் இனிமேல் வெற்றி உன் வீட்டிற்கு வரக்கூடாது என்று சொல்லி அனுப்ப கோபத்துடன் சக்தி தன் வீட்டை நோக்கி கிளம்பி செல்கிறாள். அடுத்து நடக்கப் போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv