ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஷக்தி, சங்கிலி கல்யாணத்தை நடத்த நீதிமணி எடுத்த முடிவு - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

ஷக்தி, சங்கிலி கல்யாணத்தை நடத்த நீதிமணி எடுத்த முடிவு - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

மீனாட்சி பொண்ணுங்க

மீனாட்சி பொண்ணுங்க

ஷக்தி, சங்கிலி கல்யாணத்தை நடத்த நீதிமணி எடுத்த முடிவு, ஷாக் கொடுத்த மீனாட்சி என மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இன்றைய எபிசோடில் துர்கா, யமுனா, மீனாட்சி என மூவரும் செல்வாவுக்கும் பூஜாவுக்கும் பரிமாறிக் கொண்டிருக்க பூஜா சாப்பாடு சரி இல்லை என்று மிக மோசமாக இன்சல்ட் செய்து தான் சாப்பிட்ட இலையை மீனாட்சியை எடுக்க சொல்கிறாள். பூஜாவின் திமிர்தனத்தை பார்த்து கோவத்தில் செல்வா பூஜாவை அடித்து விடுகிறான்.

அடுத்து மீனாட்சியிடம் மன்னிப்பு கேட்க சொல்கிறாள். பூஜா மன்னிப்பு கேட்டு விட்டு கோவமாக போய் விடுகிறாள். கோவமாக வந்த பூஜா வழியில் அம்மாவை சந்தித்து நடந்ததை சொல்ல கோவப்பட வேண்டாம் கல்யாணம் வரை பொறுத்திரு என சொல்லி விட்டு செல்ல செல்வா ஜீப்பில் வர பூஜாவை கண்டுகொள்ளாமல் போக பூஜா ஜீப்பை நிறுத்தி நடந்த சம்பவதிற்க்கு மன்னிப்பு கேட்டு விட்டு செல்வாவுடன் பேசுகிறாள்.

அடுத்து நீதிமணி மீனாட்சி வீட்டிற்க்கு வந்து செல்வா அடிக்கடி இங்கு ஏன் வருகிறான். சக்தி கல்யாணம் நடக்க வேண்டுமா வேண்டாமா? என கேட்க மீனாட்சி சக்தி கல்யாணம் நடக்காது என்று சொல்ல நீதிமனி ஷாக் ஆகிறான்.

Also read... பாபா வெற்றி படமா? தோல்வி படமா? இணையத்தில் வைரலாகும் சர்ச்சை!

இதனையடுத்து நீதிமணி தன் நண்பர்களுடன் குடித்துவிட்டு மீனாட்சியை அடியாட்களை வைத்து கை காலை உடைத்து வீட்டில் உட்கார வைத்தால் தான் இந்த திருமணம் நடைபெறும் என்று முடிவு எடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv