ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கார்த்திக்கின் அம்மா யமுனா கார்த்திக் திருமணம் நடக்க சக்திக்கு கடைசி வாய்ப்பு கொடுத்து கிளம்புகிறார்.
அடுத்து சங்கிலி கைதுக்கு சக்தி காரணம் என்று புஷ்பா கத்த மீனாட்சி சக்தியை ஆதரித்து புஷ்பாவை திட்டி அனுப்புகிறாள். உன்னை போலீஸ் ஏன் பிடித்தது என்று புஷ்பா சங்கிலியிடம் கேட்கிறாள். எல்லாம் சக்தி பின்னால் இருக்கும் செல்வா தான் காரணம் என்று சங்கிலி புஷ்பாவிடம் சொல்லுகிறான்.
அடுத்து மீனாட்சி வீடும் மெஸ்ஸும் என் கையில் வரவேண்டும் அதற்காக தான் உனக்கும் சக்திக்கும் திருமணம் என்று புஷ்பா சங்கிலியை அறைந்து சொல்கிறாள். சங்கிலி போலீஸ் ஸ்டேஷனில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துவிட்டான் என்று சக்தி சொல்ல, யமுனா, துர்கா மற்றும் மீனாட்சி இதை கேட்டு ஷாக் ஆகின்றனர்,
மேலும் சாமி என்னிடம் இந்த தாரைவார்க்கும் நிகழ்ச்சி நடைபெறாது என்று சொன்னது போல் நடந்தது என்று மீனாட்சி சக்தியிடம் யமுனாயிடம் மற்றும் துர்காயிடம் சொல்கிறாள். யமுனாவும் துர்காவும் சங்கிலியை திருமணம் செய்ய வேண்டாம் என்று சக்திக்கு அட்வைஸ் செய்வது, சக்தி கோவமாக யமுனாவை ரூமுக்கு அழைத்து செல்கிறாள்.
Also read... நடிகர் யோகிபாபு மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார்!
மேலும் மீனாட்சி வீட்டு பத்திரத்தை சக்தியிடம் கொடுத்து இந்த திருமணத்தில் மட்டும்தான் தீர்வு என நீதிமணி சக்தியை சம்மதிக்க வைப்பதை சக்தி யமுனாவிடம் சொல்ல, பத்திரத்தை எடுத்து யமுனாவிடம் கொடுத்து சக்தி யமுனாவை சமாதானம் செய்கிறாள்.
அடுத்ததாக மீனாட்சியும் துர்க்காவும் பஸ்க்கு காத்திருக்க, துர்கா லிப்ட் கேட்ட வண்டி வெற்றியின் வண்டி என்று மீனாட்சி கோவமாகிறாள். தன்மேல் எந்த தப்பும் இல்லை என்று மீனாட்சிக்கு வெற்றி புரிய வைக்க காரில் மீனாட்சி துர்காவை கூட்டிக்கொண்டு செல்ல மீனாட்சிக்கு மயக்கம் வருகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: TV Serial, Zee Tamil Tv