Home /News /entertainment /

மெஸ்ஸை காப்பாற்ற மீனாட்சி எடுக்கும் முடிவு - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

மெஸ்ஸை காப்பாற்ற மீனாட்சி எடுக்கும் முடிவு - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

புஷ்பா மீனாட்சியிடம் இருந்து மெஸ்ஸை பிடிங்கி பழிவாங்க பல வழிகளில் முயற்சி செய்து வரும் நிலையில் அடுத்தாக பெரிய திட்டம் ஒன்றை தீட்டுகிறாள்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    மெஸ்ஸை காப்பாற்ற மீனாட்சி எடுக்கும் முடிவு, விறுவிறுப்பான திருப்பங்களுடன் மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்.

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புதிய சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் புஷ்பா மீனாட்சியிடம் இருந்து மெஸ்ஸை பிடிங்கி பழிவாங்க பல வழிகளில் முயற்சி செய்து வரும் நிலையில் அடுத்தாக பெரிய திட்டம் ஒன்றை தீட்டுகிறாள்.

    தன்னுடைய கணவருடன் மீனாட்சியை சந்திக்கும் புஷ்பா உனக்கு பணம் கொடுக்கிறேன். மெஸ்ஸையும் வீட்டையும் கொடுத்து விடு என கூறுகிறாள். அதுமட்டுமல்லாமல் உன் மூணு பொண்ணுங்க கல்யாணத்துக்கு அவரை அனுப்பி வைக்கிறேன் என மிரட்டுகின்றனர்.  ஆனாலும் மீனாட்சி இதற்கு மறுப்பு தெரிவிக்க பத்திரத்தை கையில் கொடுத்து விட்டு கிளம்பி விடுகின்றனர்.

    Also read... நடிகை நித்யா மேனனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

    பின்னர் ஷக்தி வர இந்த பத்திரத்தை மீனாட்சி மறைத்து விடுகிறாள்‌. வீட்டையும் மெஸ்ஸையும் காப்பாற்ற மீனாட்சி 10 லட்சம் பணத்துடன் புஷ்பாவை சந்திக்க பணம் வேண்டாம், கையெழுத்து போட்டு கொடு என சொல்லி அனுப்ப வரும் வழியில் புஷ்பாவின் ஐடியாவின் படி அவளது தம்பி பணத்தை கொள்ளையடித்து விடுகிறான்.

    இதனால் கதறி துடிக்கும் மீனாட்சி போலீஸில் புகார் அளிக்க மெஸ் நடத்தும் உன்னிடம் 10 லட்சம் எப்படி வந்தது? தப்பான தொழில் செய்கிறாயா என கேட்க மீனாட்சி அதிர்ச்சி அடைகிறாள். இன்னொரு பக்கம் இனி மீனாட்சியிடம் பணத்தை கேட்டு நச்சரிக்க திட்டம் போடுகிறாள் புஷ்பா‌. இதனால் மீனாட்சி வாழ்க்கையில் நடக்க போவது என்ன? வீட்டையும் மெஸ்ஸையும் காப்பாற்ற மீனாட்சி என்ற செய்ய போகிறாள் என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv

    அடுத்த செய்தி