முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / உயிருக்கு போராடும் தாரா.. மாரி மீது கோபப்படும் சூர்யா - மாரி சீரியல் அப்டேட்

உயிருக்கு போராடும் தாரா.. மாரி மீது கோபப்படும் சூர்யா - மாரி சீரியல் அப்டேட்

மாரி சீரியல்

மாரி சீரியல்

உயிருக்கு போராடும் தாரா.. மாரி மீது கோபப்படும் சூர்யா, அடுத்து நடக்கப் போவது என்ன மாரி சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மாரி. இன்றைய எபிசோடில் தாராவுக்காக மாரி அம்மனிடம் கையில் கற்பூரம் ஏந்தி வேண்ட அதை கிளி சிவா பார்த்து மாமா ஜெகதீசனிடம் சொல்ல ஜெகதீஷ் ஓடி வந்து கற்பூரத்தை தட்டி விடுகிறார்.

ஏன் இந்த முட்டாள் தனம் பண்ணுகிறாய் என்று கேட்க தாரா அம்மா உயிர் பிழைக்க வேண்டும், அப்போது தான் சூர்யா சார் சந்தோஷமாக இருப்பார் என்று சொல்ல ஜெகதீஷ் ஹாஸ்பிடலுக்கு போகலாம் வா என்று அழைக்க மாரியும் அம்மனிடம் வேண்டி வெற்றிலை பாக்கு, மஞ்சள் எடுத்துக் கொண்டு ஹாஸ்பிடல் கிளம்புகின்றனர்.

ஆஸ்பத்திரியில் தாராவுக்கு சீரியஸ் ஆக இருப்பதாக உயிரை காப்பாற்ற முடியாது என டாக்டர் சொல்ல சூர்யா டாக்டரிடம் சண்டைக்குப் போகிறான். அனைத்துக்கும் காரணம் மாரி தான் என்று சூர்யா திட்டுகிறான்.

Also read... ”பொன்னி நதி பாடலை பாடும் விஜய்” - வாரிசு படப்பிடிப்பு தளத்தில் சுவாரஸ்யம்

பிறகு அனைவரும் உள்ளே சென்று பார்க்க தாரா உடல் மோசமாகிறது. விஷம் கொஞ்சம் கொஞ்சமாக பரவி முகம் முழுவதும் நீல நிறமாக மாற அதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். அடுத்து நடக்கப் போவது என்ன? தாரா உயிர் பிழைப்பாளா? என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv