முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தேவி நகையை திருடி மாட்டிக்கொண்டதால் மாரியை அறைந்த அரவிந்த் - மாரி சீரியல் அப்டேட்!

தேவி நகையை திருடி மாட்டிக்கொண்டதால் மாரியை அறைந்த அரவிந்த் - மாரி சீரியல் அப்டேட்!

மாரி சீரியல்

மாரி சீரியல்

தேவி நகையை திருடி மாட்டிக்கொண்டதால் மாரியை அறைந்த அரவிந்த், கோபப்பட்டு சூர்யா எடுத்த முடிவு என்ன மாரி சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மாரி.  இன்றைய எபிசோடில் தெய்வானை சூர்யாவிடம் மாரியை நன்றாக பார்த்துக் கொள்ள சொல்லும்படி சொல்லிவிட்டு போக ரூமில் பார்வதி சுஜாதா என்று கத்தி எங்க இருக்க சுஜாதா? நான் இவ்வளவு நேரம் கூப்பிட்டு ஏன் வரவில்லை என்று கேட்க மாரியின் அம்மா, தாத்தா வந்தார்கள் என்று சொல்ல பார்வதி ஆச்சரியமாய் என்னை ஏன் கூப்பிடவில்லை என்று சொல்கிறாள்.

பிறகு நீங்கள் கோயிலுக்கு போயிட்டு வந்ததால் தூங்கி கொண்டிருக்கவே நான் எழுப்பவில்லை என்று சொல்ல பார்வதி அமைதியாகிறாள். அடுத்து அரவிந்த் புதிதாக தொழில் தொடங்க வேண்டும் என்று தாராவிடம் 50 லட்சம் கேட்க தன்னிடம் பணம் இல்லை நீ சூர்யாவிடம் கேள் என்று சொல்ல அரவிந்தும் சூர்யாவிடம் பணம் கேட்க எதுக்கு என்று கேட்க ஷேர் மார்க்கெட் கம்பெனி பெயர் சொல்ல அந்த கம்பெனியில் இன்வெஸ்ட் பண்ண வேண்டாம் ஒரு ஆறு மாதம் பொறு என்று சொல்லி அனுப்பி விடுகிறான்.

இதனால் கோபத்தில் வந்த அரவிந்த் சங்கரபாண்டியிடம் சொல்ல சங்கர பாண்டி தேவி நகையை திருடி அதில் தொழில் தொடங்கு பிறகு அந்த நகையை அப்படியே கொண்டு போய் வைத்து விடலாம் என்று சொல்லி தர பிறகு அவர்கள் தேவியின் பரம்பரை நகையை திருட அதை வெளியே வரும் போது மாரி பார்த்துவிட மாரி அதனை தடுக்க அனைவரும் வர தேவியின் பரம்பரை நகைகளை பார்த்து அனைவருக்கும் அதிர்ச்சி அடைகின்றனர்.

Also read... பிரின்ஸ் படத்திலிருந்து 2-வது சிங்கிள் நாளை ரிலீஸ்!

உடனே அரவிந்த் கோவப்பட்டு மாரியை அடிக்க சூர்யா இதை பார்த்தும் நீ அவளை அடித்தது தவறு மாரியிடம் மன்னிப்பு கேள் என்று சொல்கிறான். இதனால் அடுத்து அரவிந்த் என்ன செய்வான்? அடுத்து நடக்கப் போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv