Home /News /entertainment /

மாரியின் உண்மையான அம்மாவை பார்த்த தெய்வானை - மாரி சீரியல் அப்டேட்!

மாரியின் உண்மையான அம்மாவை பார்த்த தெய்வானை - மாரி சீரியல் அப்டேட்!

மாரி சீரியல்

மாரி சீரியல்

மாரியின் உண்மையான அம்மாவை பார்த்த தெய்வானை, குடும்பத்துக்கு தெரிய வரும் பெரிய உண்மை மாரி சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மாரி. இன்றைய எபிசோடில் வரலட்சுமி பூஜை சிறப்பாக முடித்ததாக சாமுண்டீஸ்வரி மாரியை பாராட்ட மூத்த மருமகள் மாரி இனி அவுட் ஹவுஸில் இருக்க வேண்டாம் வீட்டுக்குள் அழைத்துச் செல்லுங்கள் என்று சொல்லிவிட்டு சாமுண்டீஸ்வரி கிளம்பி போக அனைவரும் சந்தோஷம் அடைகின்றனர்.

    ஹாசினி மாரியை வீட்டுக்குள் அழைத்துச் செல்ல தாரா நல்ல நேரம் பார்த்து வீட்டிற்குள் அழைத்து செல்லலாம் இப்போது வேண்டாம் என்று தடுத்துவிட சூர்யாவும் அம்மா சொல்வது தான் சரி என்று சொல்கிறான்.

    மறுநாள் காலையில் மாரியின் அம்மா தெய்வானை தாத்தா நீலகண்டன் ஸ்ரீஜா அனைவரும் மாரியை பார்க்க வர முகவரி தெரியாததால் கோயிலில் காத்திருக்கின்றனர். அங்கு பார்வதியும் சுஜாதாவும் வர தெய்வானை பார்வதியை பார்க்க ஃபிளாஷ் பாக்கில் சிறுவயதில் விபத்தில் அடிபட்டு மாரி தனியாக இருந்த காட்சி வர பார்வதியை பார்த்து தெய்வானை சந்தோஷப்பட்டு தேடுகிறாள்.ஆனால் அப்போது தீச்சட்டி ஏந்தி வரும் பெண்கள் தடுக்க பார்வதி அங்கிருந்து தெய்வானையை பார்க்காமல் சென்று விடுகிறாள்.

    பிறகு தெய்வானை பார்வதியை தேடி ஏமாந்து சாமியிடம் இத்தனை வருஷம் கழிச்சி மாரியோட அம்மாவை கண்ணில் காட்டின ஆனால் அவர்கள் என்னை பார்க்காமல் தடுத்து விட்டயே என்று வருத்தப்படுகிறாள்.

    Also read... பாரீஸில் வெக்கேஷனை கொண்டாடும் நடிகை கிருதி சனோன்!

    பிறகு தாத்தா நீலகண்டன் வந்து மாரி வீட்டிற்கு அனைவரையும் அழைத்து செல்ல வீட்டிற்குள் வந்ததும் மாரியை பார்த்து சந்தோஷம் அடையும் தெய்வானையை கட்டிப்பிடித்து அழைக்க மேலே ரூமில் பார்வதி படுத்திருக்கிறாள்‌.

    வீட்டிற்கு உள்ளே போகலாம் என்று சொல்ல தாரா மாரியை பார்க்க மாரி தயக்கத்துடன் நிற்கிறாள். இதனால் அடுத்து நடக்கப் போவது என்ன? பார்வதியை பார்த்து தெய்வானை உண்மையை போட்டு உடைப்பாளா என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv

    அடுத்த செய்தி