Home /News /entertainment /

மாரி மீது பழி போட்ட தாரா, பூஜையில் நடந்தது என்ன? - மாரி சீரியல் அப்டேட்!

மாரி மீது பழி போட்ட தாரா, பூஜையில் நடந்தது என்ன? - மாரி சீரியல் அப்டேட்!

மாரி சீரியல்

மாரி சீரியல்

மாரி மீது பழி போட்ட தாரா, அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்த சாமுண்டீஸ்வரி, பூஜையில் நடந்தது என்ன மாரி சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மாரி. வரலட்சுமி பூஜையில் பாட்டு பாடி சாமுண்டீஸ்வரி மனதை கவர்ந்தார் மாரி. தாரா தேவியின் பரம்பரை நகை தனக்கு கிடைக்கும் என ஆசையாக இருந்த நிலையில் அந்த நகையை சாமுண்டீஸ்வரி மாரி கழுத்தில் போட தாரா அதிர்ச்சி அடைந்தாள்‌.

    இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் சுமங்கலி பூஜைக்கு பக்கத்து வீட்டிலிருந்து சுமங்கலிகள் யாரும் வராததால் தாரா இவன் அபச குணக்காரி, ராசி இல்லாதவள், யாரும் இந்த பூஜையில் கலந்து கொள்ள வர மாட்டாங்க என மாரி மீது பழி போடுகிறாள்‌.

    இதனால் மாரி வருத்தப்பட்டு பீல் செய்ய சாமி முன்னாடி வேண்ட தேவி தோன்றி எட்டு சுமங்கலிகளை உள்ளே வர வைக்க அனைவரும் ஆச்சரியமடைகின்றனர். ஆனாலும் தாரா வரலட்சுமி பூஜைக்கு 9 சுமங்கலிகள் வரவேண்டும் ஆனால் எட்டு பேர் தான் வந்திருக்கிறார்கள் என்று சொல்ல சாமுண்டீஸ்வரி அந்த ஒன்பதாவது ஆள் நீதான். ஒன்பதாவது சுமங்கலி பெண்ணாக மாரியிடம் தக்ஷனை வாங்க வேண்டும் என்று சொல்ல தாரா மேலும் அதிர்ச்சி அடைகிறாள்.

    Also read... மாடர்ன் உடையில் சீதா ராமம் பட நடிகை மிருணாள் தாகூர் - இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்!

    மாரி சுமங்கலிகள் அனைவருக்கும் தானம் கொடுக்க அவர்கள் வாழ்த்த கடைசியாக தாரா புடவை ஏந்தி மாரியிடம் தர்ச்சனை வாங்க வைத்துவிட்டதால் மாரி மீது கடும் கோபம் அடைகிறாள். இதனால் அடுத்து நடக்கப் போவது என்ன? மாரியை பழி தீர்க்க என்ன செய்யப் போகிறாள் என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv

    அடுத்த செய்தி