Home /News /entertainment /

தாரா சொன்ன வார்த்தையால் மாரி எடுத்த முடிவு - மாரி சீரியல் அப்டேட்

தாரா சொன்ன வார்த்தையால் மாரி எடுத்த முடிவு - மாரி சீரியல் அப்டேட்

மாரி சீரியல்

மாரி சீரியல்

தாரா சொன்ன வார்த்தையால் மாரி எடுத்த முடிவு மாரி சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மாரி. கெஸ்ட் ஹவுஸ் போன ஹாசினி மாரிக்கு புது புடவை கட்டிவிட்டு அலங்காரம் செய்தாள்‌.

    இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் வரலட்சுமி பூஜைக்கு மாரி அழகாக ரெடியாகி வந்து சூர்யா முன்பு காட்ட சூர்யா அதை மெய்மறந்து பார்க்கிறான். பின்பு இது சரியில்லை என்று மாரியை திட்ட மாரி சிரித்துக் கொண்டே சந்தோஷமாக வீட்டு வாசலுக்கு செல்கிறாள்.

    உடனே அவளுக்கு தாரா வீட்டிற்குள் வரக்கூடாது என்று சொன்னது நினைவுக்கு வர அவளது வார்த்தைக்கு கட்டுப்பட்டு தன்னுடைய கெஸ்ட் ஹவுஸை பூஜைக்கு அழகாக ரெடி செய்கிறாள்.

    இந்த பக்கம் சூர்யா உள்பட அனைவரும் சாமுண்டீஸ்வரிக்காக காத்திருக்க சாமுண்டீஸ்வரி காரில் இருந்து இறங்கி மாரி அவுட்டோர் ரெடி செய்து இருப்பதை பார்த்து சந்தோஷமாக வீட்டுக்குள் செல்கிறார்.

    இதனையடுத்து தாரா, ஜெகதீஷ் பூஜை செய்ய தாராவை பார்த்து சாமுண்டீஸ்வரி வரலட்சுமி அதுவுமா பாட்டு பாடணும் என பாட்டு பாட சொல்ல தாரா தனக்கு பாட்டு பாட தெரியாது என்று சொல்கிறாள்.

    Also read... இயக்குனர் பாலா தனக்கு பணம் கொடுக்க வேண்டும் என பிதாமகன் தயாரிப்பாளர் புகார்

    இந்த நேரத்தில் சரியாக அவுட்டோசில் மாரி பாட்டு பாட சாமுண்டீஸ்வரி ஆச்சரியமடைகிறார். இதனால் சாமுண்டீஸ்வரி மாரிக்கு கொடுக்கப்படும் பரிசு என்ன? அவள் சூர்யாவின் மனைவி என்ற உண்மை தெரிய வந்தால் என்ன நடக்கும் என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv

    அடுத்த செய்தி