Home /News /entertainment /

மாரிக்கு எதிராக சங்கர பாண்டி செய்யும் சூழ்ச்சி - மாரி சீரியல் அப்டேட்!

மாரிக்கு எதிராக சங்கர பாண்டி செய்யும் சூழ்ச்சி - மாரி சீரியல் அப்டேட்!

மாரி சீரியல்

மாரி சீரியல்

மாரிக்கு எதிராக சங்கர பாண்டி செய்யும் சூழ்ச்சி என்ன மாரி சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மாரி. மாரி வரலட்சுமி பூஜை வரை வீட்டில் இருக்க சூர்யாவிடம் அனுமதி கேட்டிருக்கிறாள். இந்த நிலையில் இன்றைய எபிசோடில் ஹாசினியும் மாரியும் பக்கத்து வீட்டிற்கு சென்று வரலட்சுமி பூஜைக்கு குங்குமம் கொடுத்து அனைவரையும் அழைக்க அதை பார்த்த சங்கர பாண்டி பூஜைக்கு வரக்கூடாது என்று குடுகுடுப்புக்காரன் வேடத்தில் வந்து சொல்லிவிட்டு போகிறான்.

    இதனையடுத்து அன்று இரவு சூர்யாவிற்கு காலில் அடிப்பட மாரி என்ன செய்வது என தெரியாமல் தவிக்கிறாள். பிறகு டாக்டர் வந்து செக் செய்து பார்த்து காலில் சுளுக்கு என்று சொல்ல மாரி பதறுகிறாள்.

    இதனையடுத்து டாக்டர் மாரியை பார்த்து யார் என்று கேட்க சூர்யாவின் மனைவி மாரி என்று சொல்கின்றனர். மாரி கடவுளிடம் சூர்யாவுக்காக வேண்டுகிறாள். நாளைக்கு வரலட்சுமி பூஜை நல்லபடியா நடக்க வேண்டும் அப்போதுதான் சூர்யா சார்க்கு குணமாகும் என்று சொல்லி வேண்டி கொள்கிறாள்.

    Also read... தேசிய சினிமா தினம் செப்டம்பர் 16 கிடையாது - எந்த தேதி தெரியுமா?

    மறுநாள் காலையில் வரலட்சுமி பூஜையில் தேவி நகைகளை கொண்டு வந்து காட்டி பூஜையில் வைக்க அதை பார்த்த தாரா சாமுண்டீஸ்வரி அத்தை வந்து இந்த நகையை தனக்கு கொடுப்பார்கள் என்று கணக்கு போடுகிறாள். இந்த பக்கம் மாரி பூஜைக்கு ரெடியாகாமல் இருக்க ஹாசினி வந்து புடவை கட்டி விடுகிறாள்.

    பிறகு அந்த புது புடையுடன் சூர்யாவிடம் சென்று காட்ட சூர்யா மாரியின் அழகை பார்த்து மயங்குகிறான். அடுத்ததாக நடக்க போவது என்ன? சக்கர பாண்டி திட்டத்தை மீறி இந்த பூஜையில் அக்கம் பக்கத்தினர் கலந்து கொள்வார்களா? சாமுண்டீஸ்வரி அத்தை செய்ய போவது என்ன? என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv

    அடுத்த செய்தி