Home /News /entertainment /

மாரியை கடத்தி  கடலில் வீசிய தாரா - மாரி சீரியல் அப்டேட்!

மாரியை கடத்தி  கடலில் வீசிய தாரா - மாரி சீரியல் அப்டேட்!

மாரி சீரியல் அப்டேட்!

மாரி சீரியல் அப்டேட்!

மாரியை கடத்தி  கடலில் வீசிய தாரா, பரபரப்பான திருப்பங்களுடன் மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ஜீ தமிழ் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகி வரும் சீரியல் மாரி. ஜெகதீஷ் தாராவை அறைய சூர்யா தாராவுடன் வீட்டை விட்டு கிளம்ப முடிவெடுத்தார்.

    இந்த நிலையில் இன்றைய எபிசோடில் ஜெகதீஷ் தாராவிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று சொன்னதற்கு சூர்யாவும் தாராவும் வீட்டை விட்டு கிளம்ப அப்போது மாரி வருகிறாள். என்ன விஷயம் என்று கேட்க தாரா எல்லாம் நீ வந்த நேரம் நானும் என் மகனும் நடுத்தெருவுக்கு சென்று விட்டோம் என்று மாரி மீது பழியைப் போடுகிறாள்.

    இதனால் மாரி நீங்கள் இருவரும் போக வேண்டாம் நான் செல்கிறேன் என்று செல்ல ஜெகதீஷ் மாரியை போக கூடாது என தடுத்து நிறுத்தி தாராவிடம் மன்னிப்பு கேட்கிறார்.

    இருந்தாலும் தாராவுக்கு பயங்கர கோபம் ஏற்படுகிறது. சொத்து எல்லாம் மாரி பேருக்கு சென்று விட்டால் இனி நாம் காலம் ஃபுல்லா மாரியிடம் அடிமையாக வாழ வேண்டும் என்று நினைத்து மாரியை கொல்ல பிளான் செய்து ஒருவனுக்கு போன் செய்ய அவன் இரவு நேரத்தில் வந்து மாரிக்கு மயக்கம் மருந்து கொடுத்து மாரியை கோணிப்பையில் வைத்து கட்டுகிறான்.

    Also read... இணையத்தில் வைரலாகும் தமன்னாவின் ரீசென்ட் போட்டோஸ்!

    உடனே தூக்கத்திலிருந்து தெய்வானை எழுந்து தன் மகளுக்கு ஏதோ ஆபத்து என்று சாமியிடம் வேண்டுகிறாள். அப்போது சூர்யாவும் சத்தம் கேட்டு கெஸ்ட் ஹவுஸ் வர தாரா அவனை தடுத்து நிறுத்தி ரூமுக்கு சென்று படுக்க சொல்கிறாள். சூர்யாவும் தாரா பேச்சை கேட்டு ரூமுக்கு சென்றபின் ரவுடிகள் மாரியை தூக்கிக்கொண்டு சென்று கடலுக்குள் வீசுகின்றனர்.

    இதனால் மாரிக்கு என்னவாகும்? மாரியை காணவில்லை என்பது தெரிந்ததும் சூர்யா செய்ய போவது என்ன? என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv

    அடுத்த செய்தி