Home /News /entertainment /

மாரியை அசிங்கப்படுத்திய தாரா... பளாரென அறைந்த ஜெகதீஷ் - மாரி சீரியல் அப்டேட்!

மாரியை அசிங்கப்படுத்திய தாரா... பளாரென அறைந்த ஜெகதீஷ் - மாரி சீரியல் அப்டேட்!

மாரி சீரியல்

மாரி சீரியல்

மாரியை அசிங்கப்படுத்திய தாராவை பளாரென அறைந்த ஜெகதீஷ், மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மாரி. தான் கர்ப்பமான சந்தோஷத்தில் ஹாசினி அதற்கு காரணமாக கருதும் மாரியை கெஸ்ட் ஹவுஸில் சந்திக்க சென்றாள்.

    இந்த நிலையில் இன்றைய எபிசோடில் ஹாசினி கெஸ்ட் ஹவுஸில் இருக்கும் மாரிக்கு கேக் ஊட்டப் போக அதை தாரா தடுத்து மாரியை அவமானப்படுத்துகிறாள். இவள் ஒரு கருநாக்கி காரி ராசி இல்லாதவள் அதனால் தான் இவளை ஊரை விட்டு விரட்டி விட்டார்கள் என்று சொல்ல மாரி வருத்தப்படுகிறாள்.

    இதை பார்த்த சூர்யா தாரா சென்றபின் மாரியை பார்த்து ஏன் இந்த அவமானங்களை தாங்கிக் கொண்டு இங்கே இருக்க வேண்டும்? தயவு செய்து உன் ஊருக்கே சென்று விடு என்று சொல்ல மாரி எனக்கு என்ன நடந்தாலும் நான் உங்களை மட்டும் விட்டு செல்ல மாட்டேன் என்று சொல்ல சூர்யா கோபத்தில் வெளியே போகிறான்.

    பிறகு ஜெகதீஷ் தாராவுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று எண்ணி ஆடிட்டருக்கு போன் செய்து சொத்து எல்லாம் மாரி பெயருக்கு நாளை ரிஜிஸ்டர் செய்ய வேண்டும் என்று சொல்கிறாள்.

    Also read... நீங்கதான் எனக்கு மகனாக பொறக்கனும்னு கடவுள வேண்டிக்கிறேன் - குக் வித் கோமாளி புகழ் உருக்கம்!

    இதை கேட்ட தாரா சூர்யா உட்பட அனைவரும் முன்பும் கோபமாகி மாரிக்கு ஏன் சொத்தை மாற்றி எழுதறீங்க என்று பிரச்சனை செய்கிறாள். மாரி ஒரு அனாதை என்று சொல்ல கோபத்தில் ஜெகதீஷ் தாராவை அடிக்கிறார். இதை சூர்யா பார்த்து தாராவிடம் அப்பாவை மன்னிப்பு கேட்க சொல்ல ஜெகதீஷ் முடியாது என்று சொல்ல அப்ப நானும் அம்மாவும் இந்த வீட்டை விட்டு போகிறோம் என்று சொல்கிறான். இதனால் ஜெகதீஷ் செய்யப் போவது என்ன? தாராவின் அடுத்த கட்ட சூழ்ச்சி என்ன என்பது குறித்த விவரங்கள் அடுத்தடுத்த எபிசோடுகளில் தெரிய வரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv

    அடுத்த செய்தி