ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தெய்வானை சொன்ன வார்த்தையால் ஶ்ரீஜா எடுத்த முடிவு - மாரி சீரியல் அப்டேட்

தெய்வானை சொன்ன வார்த்தையால் ஶ்ரீஜா எடுத்த முடிவு - மாரி சீரியல் அப்டேட்

மாரி சீரியல்

மாரி சீரியல்

தெய்வானை சொன்ன வார்த்தையால் ஶ்ரீஜா எடுத்த முடிவு, மாரிக்கு காத்திருக்கும் சிக்கல், மாரி சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

 • News18
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மாரி. இன்றைய எபிசோடில் தினேஷ் ஸ்ரீஜா கழுத்தில் தாலி கட்டி விஷயத்தை மாரியிடம் சொல்ல மாரி ஷாக்காகிறாள். நீங்கள் எதுவும் செய்யாதீர்கள் நான் சூர்யா சார் கிட்ட விஷயத்தை சொல்லி இதை சரி செய்கிறேன் என்று சொல்லிவிட்டு போகிறாள்.

  அப்போது சங்கர பாண்டி தினேஷ் மாரி பேசுவதை ஒட்டு கேட்டு மறுநாள் காலை ஶ்ரீஜாவை பெண் பார்த்த வீட்டுக்காரர்கள் வந்து உடனே திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று சொல்ல ஸ்ரீஜா எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் எனக்கு ஆல்ரெடி திருமணம் ஆகிவிட்டது என்று தாலியை காட்ட அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

  அடுத்து தெய்வானை யார் மாப்பிள்ளை யார் உனக்கு தாலி கட்டியது என கேட்க சூர்யாவின் தம்பி தினேஷ் என விஷயத்தை சொல்ல தெய்வானை அவளின் வாழ்க்கை கெடுப்பதற்காக நீ அந்த வீட்டிற்கு செல்கிறாய் உன்னை நான் விடமாட்டேன் நீ இங்கேயே இரு என்று திட்டி விட்டுப் போகிறாள்.

  அடுத்து சங்கர பாண்டி தாராவிடம் நேற்று இரவு தினேஷ் மாரி பேசிய விஷயத்தை சொல்ல தாரா தினேஷை கூப்பிட்டு என்னவென்று விசாரிக்க ஒன்றும் இல்லை என்று சமாளித்து விட்டு செல்கிறான். அப்போது மாரி சூர்யாவிடம் தினேஷ் தாலி கட்டிய விஷயத்தை சொல்ல சூர்யா அதிர்ச்சியாகி தினேஷை கூப்பிட்டு அடிக்கிறான்.

  நீ பண்ண பிரச்சனையால் அம்மா மாரியை தான் சந்தேகப்படுவார்கள் உன்னால் மாரிக்கு தான் ஆபத்து என்று சொல்ல தினேஷ் எனக்கு வேற வழி தெரியல என்று சொல்ல சரி இந்த விஷயத்தை யாரிடம் சொல்லாதே நான் சமயபுரம் சென்று ஸ்ரீஜாவிடம் பேசிவிட்டு வருகிறேன் என்று சொல்லி கிளம்பி போகின்றனர்.

  அடுத்து வீட்டில் ஶ்ரீஜா கண்டிப்பாக அம்மா அந்த வீட்டிற்கு அனுப்ப மாட்டார்கள் நாமளே புறப்பட்டு சென்றுவிடலாம் என்று சொல்லி லெட்டர் எழுதிவிட்டு கிளம்புகிறாள். தெய்வானை ஶ்ரீஜாவை தேட அப்போது லெட்டரை பார்த்து அதிர்ச்சியடைகிறாள். அப்போது நீலகண்டனிடம் விசயத்தை சொல்கிறாள்.

  Also read... வெள்ளை நிற பிகினியில் கடற்கரையில் உலா வரும் இலியானா - வைரல் க்ளிக்ஸ்

  மேலும் மாரி வாழ்க்கையை கெடுக்க தான் இப்படி செய்கிறாள் என சொல்வது மட்டுமின்றி அன்று மாரியை பார்க்கும்போது மாரியின் அம்மாவை நான் பார்த்தேன் என்று சொல்ல அப்போது சூர்யா வர இந்த விஷயத்தை கேட்டு ஷாக்காகிறான். அடுத்து நடக்கப் போவது என்ன? என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: TV Serial, Zee Tamil Tv