ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மாரியை காப்பாற்ற உயிரை விட துணிந்த சூர்யா - மாரி சீரியல் அப்டேட்!

மாரியை காப்பாற்ற உயிரை விட துணிந்த சூர்யா - மாரி சீரியல் அப்டேட்!

மாரி சீரியல்

மாரி சீரியல்

மாரியை காப்பாற்ற உயிரை விட துணிந்த சூர்யா, மாரி சீரியலில் கடைசி நொடியில் நடந்த அதிசயம்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மாரி. இன்றைய எபிசோடில் மாரியின் உடலை சூர்யா கோயிலுக்கு தூக்கி கொண்டு போக ஜெகதீஷ் என்ன காரணம் என்று கேட்க அந்த மாரியம்மாளை தான் எந்நேரமும் மாரி வேண்டுவாள். அந்த சாமியிடமே நியாயம் கேட்க போகிறேன் என்று சொல்லி வேகவேகமாக தூக்கிக்கொண்டு ஓட எல்லாரும் பின்னால் போக தாரா சந்தோஷம் அடைகிறாள்.

    மாரியின் உடலை கோயிலில் வைத்து சூர்யா உனக்காக தான் மூன்று வேலையும் உன்னை மட்டுமே நினைப்பவள் உன் பக்தை மாரி, அவளுக்கு இந்த நிலைமையா என்று கேள்வி கேட்க மாரி உடல் அசையாமல் இருக்க அப்போது சூர்யாவிற்கு குருஜி சொன்னது ஞாபகத்துக்கு வருவது உனக்கு ஏதாவது ஆபத்து என்றால் கண்டிப்பாக மாரி வருவாள் என்ற சொல் ஞாபகத்துக்கு வருகிறது.

    உடனே சூர்யா அதை நினைத்துப் பார்த்து தனக்கு ஒவ்வொரு முறையும் ஆபத்து வரும்போது மாரி வந்து தன் உயிரை காப்பாற்றியது நினைத்துப் பார்க்க அப்போது யோசித்தவன் நேராக கோயில் உள்ளே சென்று சூலத்தை எடுத்துக்கொண்டு வர அனைவருக்கும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

    Also read... 'எல்லாம் உங்களுக்காக.. மாறுபட்ட கதைக்களத்துக்கு முயற்சி பண்றேன்' - உருகி பேசிய சிவகார்த்திகேயன்!

    தன் கழுத்தை குத்த போக அனைவரும் தடுக்க அனைவரிடம் கண்டிப்பாக மாரி உயிரோடு வருவாள் எனக்கு ஒரு ஆபத்து என்றால் கண்டிப்பாக மாரி வருவாள் அதனால் நான் சாகப் போகிறேன் என்று சொல்ல அனைவரும் தடுக்க அதையும் மீறி அவன் சூலத்தை குத்தப் போக மாரி உடல் அசைய அனைவரும் அதைப் பார்த்து சந்தோஷம் அடைகின்றனர். அடுத்து நடக்கப் போவது என்ன? மாரி முழுமையாக உயிர் பெறுவாளா? என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv