ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

உயிருக்கு போராடும் மாரி.. குருஜி சொன்ன வார்த்தையால் சூர்யா எடுத்த முடிவு - மாரி சீரியல் அப்டேட்

உயிருக்கு போராடும் மாரி.. குருஜி சொன்ன வார்த்தையால் சூர்யா எடுத்த முடிவு - மாரி சீரியல் அப்டேட்

மாரி சீரியல்

மாரி சீரியல்

உயிருக்கு போராடும் மாரி, குருஜி சொன்ன வார்த்தையால் சூர்யா எடுத்த முடிவு, மாரி சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மாரி. இன்றைய எபிசோடில் சூர்யா ஜெகதீஷிடம் மாரிக்கும் உங்களுக்கும் மட்டும் தெரிந்த உண்மையை எனக்கு சொல்லு என்று கட்டாயப்படுத்த ஜெகதீஷ் சொல்ல வர தாராவை பார்த்து அமைதியாகிறான்.

பிறகு தாராவிடம் சூர்யா மாரிக்கு ஏற்கனவே நடக்கப்போவது விஷயம் தெரிந்திருக்கிறது என்று சொல்ல தாரா அதிர்ச்சியாகிறாள்‌. டாக்டர் வந்து இன்னும் மாரி அபாய கட்டத்தில் தான் இருக்கிறாள் உயிருக்கு ஆபத்து என்று சொல்லிவிட்டு போகிறார்.

இதனால் சூர்யா மாரியிடம் சென்று எழுந்து வா பட்டிக்காடு என்று பீலாக பேச அப்போது கிளி வந்து மாரி எப்பவும் சாமி கும்பிடும். அந்த மாரியம்மா தான் காப்பாற்ற வேண்டும் என்று சொல்ல சூர்யா யோசனை வந்து நேராக குருஜியிடம் செல்கிறான்.

குருஜியிடம் மாரி உயிருக்கு ஆபத்து இருப்பதாக சொல்ல குருஜி நீ மனசு உருகி கடவுளுடன் வேண்டு, கஷ்டப்பட்டு பணம் சேர்த்து அதில் பூஜை செய்து தீர்த்தத்தைக் கொண்டு போய் மாரிக்கு கொடு, கண்டிப்பாக மாரி உயிரோடு வருவார் என்று சொல்ல அப்படி செய்தால் மாரி உயிரோடு வருவாளா என்று கேட்க கண்டிப்பாக வருவாள் என்று குருஜி சொல்கிறார்.

உடனே சூர்யா வெளியில் சென்று மாரிக்காக உடல் வருத்தி வேலைகள் செய்து கஷ்டப்படுகிறான். அவர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு கோயில் சென்று மாரிக்காக கடவுளிடம் சாமி கும்பிடுகிறான்.

Also read... சார்பட்டா நாயகி துஷாராவுக்கு பிறந்தநாள்! அழகான க்ளிக்ஸ்!

சூர்யாவின் வேண்டுதல் நிறைவேறுமா? உயிருடன் மீண்டு வருவாளா மாரி? அடுத்து நடக்கப் போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv