ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மாரிக்கு ஏதோ சக்தி இருக்கிறது.. இன்ஸ்பெக்டர் பேச்சால் சூர்யாவுக்கு வந்த சந்தேகம்? - மாரி சீரியல் அப்டேட்!

மாரிக்கு ஏதோ சக்தி இருக்கிறது.. இன்ஸ்பெக்டர் பேச்சால் சூர்யாவுக்கு வந்த சந்தேகம்? - மாரி சீரியல் அப்டேட்!

மாரி சீரியல்

மாரி சீரியல்

மாரிக்கு ஏதோ சக்தி இருக்கிறது என்று இன்ஸ்பெக்டர் கூறியதால் சூர்யாவுக்கு வந்த சந்தேகம், அடுத்து நடக்கப் போவது என்ன மாரி சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இன்றைய எபிசோடில் சூர்யா மாரியை ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்து ட்ரீட்மென்ட் பார்த்துக் கொண்டிருக்க வீட்டில் அனைவரும் உட்கார்ந்திருக்க சங்கர பாண்டி வந்து டிவி ஆன் செய்து பார்க்க சொல்கிறான்.

  அனைவரும் டிவியை பார்க்க கலவர விஷயம் தெரிய வர மாரிக்கு விபத்து என்று தெரிந்து ஹாசினி ஜெகதீசுக்கு போன் செய்து விஷயத்தை சொல்ல ஜெகதீஷ் சூர்யாவிடம் விஷயத்தை கேட்டு தெரிந்து கொண்டு புறப்படுகிறான்.

  இந்த பக்கம் தாராவும் ஹாஸ்பிடலுக்கு புறப்பட இன்ஸ்பெக்டர் வந்து மாரிக்கு ஒரு அதிதீக சக்தி இருக்கிறது. அது என்ன என்று தெரியவில்லை என்று சொல்லிவிட்டு போக சூர்யா யோசிக்கிறான். நமக்கு ஆபத்து என்றால் மாரி காப்பாற்றுவது என அனைத்தையும் நினைத்து பார்க்கிறார்.

  Also read... நயன் - விக்கி குழந்தைகளின் வாடகை தாய் துபாயில் இருக்கிறாரா? இணையத்தில் வைரலாகும் செய்தி

  அப்பாவுக்கும் மாரி பற்றி ஏதோ ஒரு ரகசியம் தெரிந்திருக்கிறது என்று தெரிந்து கொண்டு அப்போது ஜெகதீஸ் வந்து மாரி குறித்து கேள்வி கேட்க அப்போது தாரா வர ஜெகதீஷ் அமைதியாகிறார். மாரிக்கு இருக்கும் சக்தி பற்றி சூர்யாவுக்கு தெரிய வருமா? இந்த விஷயம் எல்லோருக்கும் தெரிந்தால் தாரா அடுத்து என்ன செய்வாள்? என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: TV Serial, Zee Tamil Tv