ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சூர்யாவை காப்பாற்ற போய் மாரிக்கு வந்த பிரச்சனை - மாரி சீரியல் அப்டேட்!

சூர்யாவை காப்பாற்ற போய் மாரிக்கு வந்த பிரச்சனை - மாரி சீரியல் அப்டேட்!

மாரி சீரியல்

மாரி சீரியல்

சூர்யாவை காப்பாற்ற போய் மாரியின் உயிருக்கு வந்த பிரச்சனை, சூர்யா எடுத்த முடிவு என்ன? மாரி சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மாரி. இன்றைய எபிசோடில் கலவரத்தில் மாரி சூர்யாவை தேட சூரியா அங்கு வந்து காரில் இறங்கி போலீஸ் இன்ஸ்பெக்டர் கார் தீ பிடித்திருப்பதை பார்த்து மாரி சொன்னது சரிதான் என்று நம்புகிறான்.

    அப்போது மாரி சூர்யாவை பார்த்துவிட வராதீங்க என்று கத்த அதையும் மீறி சூர்யா வர ஒருவன் பாமை வீச சூர்யா மேல் பட வருகிறது. மாரி அருகே வந்து சூர்யாவை காப்பாற்றி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுகிறாள்.

    உடனே மாரியை தூக்கிக்கொண்டு சூரியா ஒடுகிறான். வழியில் வண்டி எதுவும் வராததால் தானே கையால் தூக்கிக் கொண்டு போய் ஆஸ்பத்திரில அட்மிட் செய்கிறான். அங்கு சூர்யா மாரியின் கணவன் என்று கையெழுத்து போடுகிறான்.

    Also read... உலகளவில் கொட்டும் வசூல்! அம்மாடியோவ் சொல்லவைக்கும் பொன்னியின் செல்வன் கலெக்‌ஷன்!

    பின்னர் இன்ஸ்பெக்டர் வந்து விசாரிக்க சூர்யா வீட்டில் நடந்த விஷயங்களை கூறுகிறான். அதன்பிறகு மாரிக்கு அவசரமாக ரத்தம் தேவைப்பட சூரியாவே ரத்தம் கொடுக்க முடிவு செய்கிறான். அடுத்து நடக்கப் போவது என்ன? மாரிக்கு தன் மேல் இருக்கும் காதலை சூர்யா புரிந்து கொள்வானா? அல்லது தொடர்ந்து விலகிச் செல்வானா என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv