ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இன்ஸ்பெக்டரை காப்பாற்ற போய் சிக்கலில் சிக்கிய மாரி - மாரி சீரியல் அப்டேட்!

இன்ஸ்பெக்டரை காப்பாற்ற போய் சிக்கலில் சிக்கிய மாரி - மாரி சீரியல் அப்டேட்!

மாரி சீரியல்

மாரி சீரியல்

இன்ஸ்பெக்டரை காப்பாற்ற போய் சிக்கலில் சிக்கிய மாரி, தாராவுக்கு சூர்யா கொடுத்த அதிர்ச்சி, மாரி சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மாரி. இன்றைய எபிசோடில் சூர்யாவின் வீட்டு வாசலில் நின்று கொண்டிருக்கும் மாரியை அந்த வழியாக வரும் இன்ஸ்பெக்டர் என்னவென்று விசாரிக்க ஒன்றும் இல்லை சார் நான் இந்த வீட்டில் மருமகள் சின்ன பிரச்சனை நான் உள்ளே சென்று விடுவேன் என்று சொல்ல இன்ஸ்பெக்டர் நம்ம மறுத்து உண்மையை சொல்ல கேட்க ஒன்றுமில்லை என்று சொல்லி மாரி சமாளிக்கிறாள்.

  அப்போது மாரி அந்த இன்ஸ்பெக்டரின் மனைவி குழந்தையை பார்த்து இன்ஸ்பெக்டர் சென்ற பின் மாரிக்கு முன்னறிவிப்பு ஏற்படுகிறது. அதில் அந்த ஜீப் கலவரத்தில் வெடித்து சிதறுவது போல காட்சி தெரிய உடனே இன்ஸ்பெக்டர் ஜீப் பின்னால் ஃபாலோ செய்தபடி மாரி ஓடுகிறாள்.

  அப்போது வாட்ச்மேன் பார்த்து தாரா மற்றும் சங்கர பாண்டியிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பின்னாலே மாரி ஓடிய விஷயத்தை சொல்ல உடனே வீட்டுக்குள் வர சூர்யாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்க என்னவென்று கேட்க ஒன்றும் இல்லை என்று சமாளிக்கிறான். பிறகு டாக்டரை வர வைக்கின்றனர்.

  Also read... ஜெயலலிதா படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்த சிவாஜி கணேசன்

  இந்த பக்கம் இன்ஸ்பெக்டர் ஸ்டேஷன் உள்ளே வர பின்னாடியே வந்த மாரி இந்த ஜீப் வெடிக்க போவதாக சொல்ல இன்ஸ்பெக்டர் நம்ப மறுத்து குழந்தையும் மனைவியும் கூட்டிக்கொண்டு ஸ்கூலுக்கு கிளம்புகிறார்.

  மாரி சொல்ல இன்ஸ்பெக்டர் மறுத்து ஸ்டேஷனில் அடைக்க அவளது உடல்நிலை சரியில்லாத இருக்கும் சூர்யாவிற்கு தாரா பால் கொண்டு வர சூர்யா நீ இப்படி இருக்க என்ன காரணம் என்று கேட்க இரவில் தேவி தோன்றினார்கள் என்று விஷயத்தை சொல்ல தாரா அதிர்ச்சி அடைகிறாள். இதனால் அடுத்து நடக்கப் போவது என்ன? மாரி எப்படி போலீஸாரிடம் இருந்து மீண்டு வரப் போகிறாள்? என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: TV Serial, Zee Tamil Tv