ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மாரியை கடத்த முயலும் ரவுடிகள்.. சூர்யா செய்த விஷயம் - மாரி சீரியல் அப்டேட்

மாரியை கடத்த முயலும் ரவுடிகள்.. சூர்யா செய்த விஷயம் - மாரி சீரியல் அப்டேட்

மாரி சீரியல்

மாரி சீரியல்

மாரியை கடத்த முயலும் ரவுடிகள், சூர்யா செய்த விஷயம் மாரி சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மாரி. இன்றைய எபிசோடில் வீட்டு வாசலில் மழை பெய்து கொண்டிருக்க மாரி மழையில் நனைந்தபடி வாசலில் நிற்க சூர்யா தன் ரூமில் உள்ள ஜிமிக்கியை எடுத்து ஜிமிக்கி உடன் பீல் பண்ணி பேசுகிறான்.

  மாரி வெளியில் மழையில் நிற்க ரவுடிகள் நான்கைந்து பேர் மாரியை பார்த்து யார் என்று கேட்க நான் இந்த வீட்டின் மருமகள் வெளியில் நிற்கிறேன் வேறு ஒன்றும் இல்லை என்று சொல்லி சமாளிக்க ரவுடிகள் நம்ம மறுத்து காத்திருக்கின்றனர்.

  ரூமில் தூக்கம் வராமல் சூர்யா புரண்டு படுக்க அப்போது தேவி தோன்றி பாட்டு பாடி சூர்யாவை தூங்க வைக்கிறாள். வெளியில் ரௌடிகள் மாரியிடம் வம்பு இழுத்து தகராறு செய்ய மாரி பாட்டு பாட அந்த பாட்டு சத்தம் கேட்டு சூர்யா கண்விழிக்கிறான்.

  ரவுடிகள் மாரியை தூக்க அப்போது சூர்யா வந்து ரவுடிகளை அடித்து மாரியை காப்பாற்றி கிராமத்துக்கு போக சொல்ல மாரி நான் காலையில் சென்று விடுகிறேன் என்று சொல்லி வாசலிலேயே நிற்கிறாள். பொழுது விடிய மாரி வாசலிலே நடுங்கியபடி படுத்திருக்கிறாள்.

  Also read... லிவிங் டுகெதர் வரமா? சாபமா? என்பதைச் சொல்லும் சந்தோஷின் காதலிசம் படம்!

  இதைப் பார்த்த வாட்ச்மேன் டீ கொடுக்க சொல்ல தனக்கு ஒன்றும் ஆகாது, இரவு சூர்யா சார் மழையில் நனைந்ததால் அவருக்கு உடம்பு சரியில்லாமல் போகும் தயவு செய்து அவரை போய் பாருங்கள் என்று சொல்ல ரூமில் சூர்யா உடல் நிலை சரியில்லாமல் படுத்திருக்கிறான்.

  இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன? மாரி வீட்டை விட்டு வெளியேறிய விஷயம் ஜெகதீஷ்க்கு தெரிய வருமா? என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: TV Serial, Zee Tamil Tv