ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விஷ பாட்டிலை மாரி ரூமில் மறைத்து வைக்கும் சங்கர பாண்டி - மாரி சீரியல் அப்டேட்

விஷ பாட்டிலை மாரி ரூமில் மறைத்து வைக்கும் சங்கர பாண்டி - மாரி சீரியல் அப்டேட்

மாரி சீரியல்

மாரி சீரியல்

விஷ பாட்டிலை மாரி ரூமில் மறைத்து வைக்கும் சங்கர பாண்டி, அடுத்து நடக்கப் போவது என்ன? மாரி சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மாரி. இன்றைய எபிசோடில் சங்கர பாண்டி யாருக்கும் தெரியாமல் விஷ பாட்டிலை மறைத்துக் கொண்டு மாரி ரூமில் வந்து தேடுவது போன்று டிவி பின்னால் மறைத்து வைக்கிறான்.

    பிறகு ஜெகதீஷ் கம்பெனி ஆடிட்டருக்கு போன் செய்து உடனடியாக பெங்களூர் செல்ல வேண்டும் என்று சொல்லி அவரை பெங்களூர் போக சொல்கிறார். பின்னர் மாரி தங்கி இருக்கும் அவுட்டோரில் சங்கரபாண்டியை சத்தம் போட்டு வெளியே அனுப்பிவிட்டு மாரியிடம் நான் பெங்களூர் செல்வதாகவும் வரும் வரை ஜாக்கிரதையாக இருக்கவும் கண்டிப்பாக ஏதாவது நடக்கும் அதனால் என்ன நடந்தாலும் நீ வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

    Also read... கார்த்திக், கவுண்டமணி படத்துக்கு முன்னோடியாக அமைந்த சிவாஜி, சந்திரபாபு படம்

    பின்னர் இரவு மாரி நிலவுடன் பேசிக் கொண்டிருக்க அதை பார்த்த சூர்யா என்னவென்று கேட்க நிலவு என்று சொல்ல பைத்தியம் பட்டிக்காடு என்று திட்டி விட்டுப் போகிறான்.

    விஷப்பாட்டில் விஷயத்தில் அடுத்து நடக்கப்போவது என்ன? மொத்த குடும்பத்திற்கும் தாராவும் சங்கரபாண்டியும் செய்த சூழ்ச்சிகள் வெளிவருமா? என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv