ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பூஜை முடிந்த கையோடு தாராவுக்கு சூர்யா கொடுத்த அதிர்ச்சி - மாரி சீரியல் அப்டேட்

பூஜை முடிந்த கையோடு தாராவுக்கு சூர்யா கொடுத்த அதிர்ச்சி - மாரி சீரியல் அப்டேட்

மாரி சீரியல்

மாரி சீரியல்

பூஜை முடிந்த கையோடு தாராவுக்கு சூர்யா கொடுத்த அதிர்ச்சி, மாரி சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மாரி. இன்றைய எபிசோடில் கோயிலில் கலச பூஜையை நிறைவு பெற்றவுடன் மாரிக்கும் சூர்யாவுக்கும் முதல் மரியாதை அளிக்கின்றனர். அடுத்து வீட்டில் தேவி போட்டோ முன்பு மாரி கலச பூஜை நன்றாக நடத்தி முடித்து விட்டேன், அதற்கு நீங்கள் தான் காரணம் என்று சொல்கிறாள்.

    இதை கேட்டதும் தாரா சூர்யா மட்டும் சரியான நேரத்திற்கு கலசத்தை கொண்டு வரவில்லை என்றால் கஷ்டம் தான் என்று சொல்லி பேச அனைவரும் மாரியை பாராட்டுகின்றனர்.

    அப்போது சூர்யா தாராவை தனியா அழைத்துக்கொண்டு சென்று கலசத்தை திருடியது வேற யாரும் அல்ல சங்கர பாண்டி தான் என்று சொல்ல தாரா அதிர்ச்சியாகி சமாளிக்க உடனே இதை போலீசில் சொல்ல வேண்டும் என்று போலீசை வரவழைத்து சங்கர பாண்டியை அடித்து போலீஸில் பிடித்து கொடுக்கிறான்.

    பின்னர் ஸ்ரீஜா, அரவிந்த் தாராவிடம் ஏன் சங்கரபாண்டியை பிடித்து கொடுத்தாய் என்று கேட்க இல்லையென்றால் மாரி மேல் அவனுக்கு நம்பிக்கை வந்துவிடும் என் மேல் நம்பிக்கை போய்விடும் அதனால்தான் நான் சங்கர பாண்டியை போலீசில் பிடித்துக் கொடுத்தேன் என்று தாரா சொல்கிறாள்.

    Also read... புன்னகை மன்னனில் நடிகையின் அனுமதி இல்லாமல் முத்தம் கொடுத்த கமல்

    அடுத்து அரவிந்த் சங்கர பாண்டியனை ஜாமில் எடுத்து வீட்டுக்கு கூட்டிட்டு வர அனைவரும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று சொல்ல மாரி சங்கர் பாண்டியை வீட்டுக்குள் சேர்த்து கொள்ள சொல்ல ஜெகதீஷ் மாரியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் தான் இந்த வீட்டுக்குள்ளே அனுப்புவேன் என்று சொல்கிறார். இதனால் அடுத்து நடக்கப் போவது என்ன? சூர்யா என்ன செய்யப் போகிறான் என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv