ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சூர்யாவின் முடிவால் அதிர்ச்சியான தாரா - மாரி சீரியல் அப்டேட்!

சூர்யாவின் முடிவால் அதிர்ச்சியான தாரா - மாரி சீரியல் அப்டேட்!

மாரி சீரியல்

மாரி சீரியல்

மீண்டும் உயிரை காப்பாற்றிய மாரி, சூர்யாவின் முடிவால் அதிர்ச்சியான தாரா, நடந்தது என்ன என மாரி சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

 • News18
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மாரி. இன்றைய எபிசோடில் சூர்யா அனைவரும் முன்னால் பாடியபடி இருக்க மாரி அவுட் அவுசில் கதவை தட்டியபடி இருக்கிறாள்.

  பாடிக்கொண்டிருக்கும் சூர்யா மாரியை தேட மாரி அங்கு இல்லாமல் இருப்பது அப்போது ஹாசினியிடம் மாரி எங்கே என்று கேட்க ஹாசினி மாரியை தேடி செல்கிறாள்.

  அடுத்து அரவிந்த், சங்கர பாண்டி சாண்டி லைட்டை பார்த்து கொண்டே இருக்க சாண்டிலைட் லேசாக அறுந்து கொண்டே வருகிறது.  அதற்குள் மாரியை தேடி போன ஹாசினி அவுட் அவுசில் கதவு தட்டும் சத்தம் கேட்டு திறந்து விட மாரி சூர்யாவுக்கு ஆபத்து என்று வேக வேகமாக வீட்டிற்குள் ஓடி வருகிறாள்.

  அப்போது சாண்டில் லைட் கீழே விழ மாரி சூர்யாவை காப்பாற்ற அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். சூர்யாவுக்கு அடிபடாமல் இருக்க மாரிக்கு காலில் லேசான காயம் ஏற்படுகிறது. உடனே சூர்யா மாரிக்கு முதலுதவி செய்து டாக்டருக்கு போன் செய்து உடனே வர சொல்ல டாக்டர் யார் என்று கேட்க சூர்யா அனைவரது முன்னாலும் மாரியை மனைவி என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

  பிறகு மாரியை கையில் தூக்கி கொண்டு மேலே ரூமுக்கு கொண்டு செல்ல சுயம்வரம் வந்திருக்கும் பெண்கள் வேலைக்காரி என்று சொன்னீர்கள் அவள் தான் சூர்யாவின் மனைவியா என்று தாராவை கேள்வி கேட்டு திட்டி விட்டு செல்கிறார்கள். இதனால் தாரா அதிர்ச்சி அடைகிறாள்.

  சூர்யா மாரியை ரூமில் படுக்க வைத்தும் டாக்டர் வந்து கட்டு போடுகிறார். அப்போது மாரிக்கு ஊசி போட மாரி ஊசி என்றால் பயம் என்று சொல்ல சூரியா அணைத்துக்கொள்ள மாரி சூர்யா பீல் ஆகின்றனர்.

  கீழே தாரா அரவிந்தையும் சங்கரப்பாண்டியும் திட்டி எதுக்கு அவசரப்பட்டு இந்த மாதிரி பண்ணீங்க என்று கேட்க அரவிந்த் சொத்துக்காக தான் பண்ணேன் என்று சொல்ல அப்போது கதவு சத்தம் மட்டும் கேட்க சூர்யா வருகிறான்.

  Also read... த்ரிஷாவின் பிருந்தா சீரிஸ்.. படப்பிடிப்பு முடிந்தது.. ரிலீஸ் எப்போது?

  சூர்யா தாராவிடம் அம்மா யாரோ என்னை கொல்ல பார்க்கிறார்கள் என்பது உறுதியாகுது பால்ல விஷம், கலவரம், லைட் கீழே விழுந்தது இதெல்லாம் பார்க்கும்போது எதேச்சையா நடந்த விபத்து மாதிரி தெரியல யாரோ கொல்ல திட்டம் போடுறாங்க, சோ போலீஸ்கிட்ட போறது தான் சரி என்று சொல்ல தாரா அதிர்ச்சி அடைகிறாள். அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: TV Serial, Zee Tamil Tv