ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சூர்யாவை கொல்ல அரவிந்த் செய்யும் வேலை - மாரி சீரியல் அப்டேட்

சூர்யாவை கொல்ல அரவிந்த் செய்யும் வேலை - மாரி சீரியல் அப்டேட்

மாரி சீரியல்

மாரி சீரியல்

சூர்யாவை கொல்ல அரவிந்த் செய்யும் வேலை, மாரி செய்ய போவது என்ன என மாரி சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மாரி. இன்றைய எபிசோடில் சூர்யா ரூமில் ரெடியாகி கொண்டிருக்க அப்போது அவன் மனசாட்சி தோன்றி சூர்யாவிடம் உனக்கு இரக்கமே இல்லை மாரி எத்தனை தடவை உன் உயிரை காப்பாத்தி இருக்கா நீ அவளை விட்டுட்டு இன்னொரு கல்யாணம் பண்ற என்று கேட்க சூர்யா ஃபீல் செய்கிறான். ஆனாலும் சூர்யா நானும் அதற்கு கைமாறாக அவளது உயிரை காப்பாத்திட்டேன் அவ்வளவுதான். அதனால் தான் அந்த கல்யாணத்துக்கு ஓகே சொன்னேன் என்று சமாளிக்க மனசாட்சி திட்ட சூர்யா பீல் செய்கிறான்.

    விக்ரம் ஒரு லேப்பில் ஹாசினி கொடுத்த விஷப்பாட்டில் கொடுத்து பரிசோதனை செய்ய அந்த ஊழியர் அந்த பாட்டிலை கிளினிக் செய்து அதில் நீரோ டாக்ஸி என்ற விஷம் கலந்து இருக்கிறது என்று சொல்ல அதை வாங்கிக் கொண்டு செல்கிறான்.

    அதை பார்த்த தினேஷ் தாராவிடம் சென்று நீங்க பண்ணது தப்புமா ஏன் மாரி அண்ணி இருக்கும் போது இன்னொரு கல்யாணம் ஏற்பாடு பண்றீங்க இது நீங்க மாரிக்கு பண்ற துரோகம் என்று சொல்ல தாரா தினேஷை சத்தம் போட்டு அனுப்பி வைக்கிறாள்.

    அடுத்து ரூமில் சூர்யா பீல் செய்தபடி இருக்க மாரியிடம் நாளை நடக்கும் பங்க்ஷனில் யாராவது உன்னை என்னவென்று கேட்டால் நான் என்ன சொல்வது கேட்க மாரி என்னை வேலைக்காரி என்று சொல்லுங்க என்று சொல்ல அதைக் கேட்டு சூர்யா இன்னும் ஃபீல் செய்கிறான்.

    Also read... பாலுமகேந்திராவின் மூன்றாம் பிறை மலையாளப் படத்தின் தழுவலா?

    பிறகு யாருக்கும் தெரியாமல் அரவிந்த் வெளியே வந்து சாண்டில் லைட்டை கழட்ட அப்போது சங்கர பாண்டி வந்து காரணம் கேட்க இது நாளை காலையில் அறுந்து சூர்யா தலையில் விழுந்து சாகப் போகிறான் என்று சொல்ல அப்போது சத்தம் கேட்டு மாரி எழுந்து வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன? சூர்யாவை கொல்ல நடக்கும் சதியை தடுப்பாளா மாரி? என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv