ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சூர்யாவை கொல்ல தாரா நடத்தும் சுயம்வரம் - மாரி சீரியல் அப்டேட்

சூர்யாவை கொல்ல தாரா நடத்தும் சுயம்வரம் - மாரி சீரியல் அப்டேட்

மாரி சீரியல்

மாரி சீரியல்

சூர்யாவை கொல்ல தாரா நடத்தும் சுயம்வரம், காப்பாற்றுவாளா மாரி என மாரி சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

 • News18
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மாரி. இன்றைய எபிசோடில் சூர்யா மாரிக்கு மாத்திரை போட முயற்சி செய்ய இதை ஜன்னலில் இருந்து தாரா சங்கரபாண்டி அரவிந்த் மூவரும் பார்ப்பதற்கு சூர்யா மாரிக்கு முத்தம் கொடுப்பது போல் தெரிகிறது. இதை பார்த்து அதிர்ச்சியாகின்றனர். பின்பு தான் சூரியா முத்தம் கொடுக்கவில்லை மாத்திரை போடுகிறான் என்று தெரிந்துகொண்டு ரிலாக்ஸாகின்றனர்

  பிறகு மாரி சந்தோஷமாக சூர்யாவை பார்த்தபடி படுக்க மறுநாள் காலை அனைவரும் இருக்க தாரா வரும் வெள்ளிக் கிழமை ஒரு சுயம்வரம் மாதிரி ஏற்பாடு செய்து இருக்கேன். எனது சொந்தக்காரங்க ரிலேஷன் என்று பணக்கார 3 பெண்கள் வருகிறார்கள் அந்த மூன்று பெண்களில் சூர்யாவுக்கு யார் பிடிக்குதோ அவர்களை திருமணம் செய்து வைக்கிறேன் என்று சொல்கிறாள்.

  இதை கேட்டு சூர்யா மாரி பீல் செய்ய ஹாசினியின் அண்ணன் விக்ரமை சூர்யா பார்த்து மாரியின் அம்மாவை தயவு செய்து கண்டுபிடித்து தருமாறு சொல்கிறான். விக்ரமும் கண்டிப்பாக கண்டுபிடிப்பதாக சொல்கிறார்.

  அடுத்து வீட்டில் நாளை நடக்கப் போகும் சுயம்வரத்தில் நீ அனைவரின் முன்னால் பாட்டு பாட வேண்டும் என்று தாரா சொல்ல சூர்யா ஏற்றுக் கொள்கிறான். அப்போது அரவிந்த் ஒரு பெரிய லைட் பிரசண்ட் செய்ய ஏன் என்று கேட்க நாளை பங்க்ஷன் நடக்கும் போது வீடு பிரமாண்டமாக தெரிய வேண்டும் அதற்காக தான் என்று சொல்லி ஆட்கள் சென்று அந்த லைட்டை மேலே உயரத்தில் மாற்றுகின்றனர்.

  Also read... புடவையில் சொக்க வைக்கும் நடிகை வாணி போஜன் - ரீசென்ட் போட்டோஸ்!

  அது மட்டுமல்லாமல் நாளை பங்க்ஷன் நடக்கும் போது மாரியை மனைவி என்று யாரும் சொல்லக்கூடாது என்று சொல்ல மாரி ஃபீல் ஆக சூர்யாவிடமும் நீ எக்காரணம் கொண்டும் மாரியை மனைவி என்று சொல்லக்கூடாது என்று சொல்ல சூர்யாவும் பீல் ஆக அனைவரும் கலைந்து செல்ல அரவிந்த் அந்த sandele லைட் பார்த்தபடி நிற்கிறான். அரவிந்த் போட்ட திட்டம் என்ன? சூர்யாவுக்கு வரும் ஆபத்தை மாரி தடுப்பாளா என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: TV Serial, Zee Tamil Tv