ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பூஜாவின் சதி திட்டத்தால் கொலைகாரியான மாரி - மாரி சீரியல் அப்டேட்

பூஜாவின் சதி திட்டத்தால் கொலைகாரியான மாரி - மாரி சீரியல் அப்டேட்

மாரி சீரியல்

மாரி சீரியல்

பூஜாவின் சதி திட்டத்தால் கொலைகாரியான மாரி அடுத்து நடக்க போவது என்ன என மாரி சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மாரி. இன்றைய எபிசோடில் சூர்யாவிடம் மாரி பணம் வாங்கியதை பார்க்கும் ஸ்ரீஜா தாராவிடம் சென்று விஷயத்தை சொல்வது தாரா அனைவரையும் கூப்பிட்டு மாரி பத்து லட்சம் பணத்தை வாங்கியதை சொல்கிறாள்.

    தாரா இது தான் மாரியின் சுயரூபம் மாரி பணத்துக்கு ஆசைப்படுபவள் இந்த சொத்துக்காக தான் இந்த வீட்டிற்கு வந்தாள்‌. இந்த உண்மை நிரூபிக்கபட்டுவிட்டது என்று சொல்ல அனைவருக்கும் மாரியிடம் ஏன் பணம் வாங்கினாய் என்று கேட்க மாரி மௌனமாக இருக்கிறாள்.

    தாரா கேட்டும் மாரி சொல்லாமல் தவிக்க சூர்யா தயவுசெய்து மாரியிடம் இதைப்பற்றி யாரும் கேட்காதீர்கள் என்று சொல்லிவிட்டு போக பிரியா மாரியிடம் அழுகிறாள். என்னால் தான் உங்களுக்கு கெட்ட பேர் என்று சொல்ல நீ ஒன்றும் கவலைப்படாதே முதலில் பணத்தை கொடுத்து அந்த வீடியோ வாங்குற வேலையை பார்க்கலாம் என்று சொல்லி நீ இரு நான் போய் பணத்தை கொண்டு வரேன் என்று சொல்லி விட்டு உள்ளே போகிறாள்.

    Also read... விஷ்ணு விஷால் - ஐஸ்வர்யா லட்சுமியின் கட்டா குஸ்தி ரிலீஸ் எப்போது - வெளியானது சூப்பர் அப்டேட்!

    அதற்குள் மாரிக்கு தெரியாமல் ஸ்ரீஜா அந்த பணத்தை எடுத்து விட்டு டம்மி பணத்தை வைத்து விட அதை எடுத்துக் கொண்டு மாரியும் பிரியாவும் அந்த ரவுடியை பார்க்க போகின்றனர். இவர்களுடன் ஸ்ரீஜா செல்கிறாள். அந்த ரவுடியிடம் பணத்தை கொடுத்து வீடியோ கேட்க அவன் பணத்தை பிரித்துப் பார்க்க அது பணமில்லாமல் இருக்க கோவப்பட்டு பிரியாவை கழுத்தை நெறித்து சாகடிக்க பார்க்க அப்போது மாரி அவனை அடிக்க அவன் இறந்து போகிறான். இதை தெரிந்து கொண்ட ஸ்ரீஜா போலீசுக்கு போன் செய்து விஷயத்தை சொல்ல போலிஸ் அங்கு வர மாரி அதிர்ச்சி அடைகிறாள்.

    அடுத்து நடக்கப்போவது என்ன? மாரி கைதாவாளா? அல்லது தப்பிப்பாளா என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv